20/1/09

சாரு, ஆனந்தகண்ணன், குழந்தைப்போராளி, கொரியன் போன்

புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய வாரம் சென்னையின் எல்லா அரங்கங்களும் புத்தக வெளியீட்டு விழாக்களால் நிறைந்திருந்தன. பிலிம் சேம்பரில் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா. காம்பியரிங் செய்ய ஆனந்த கண்ணனும், நிஷாவும் வந்திருந்தனர். அவர்களுக்கு புத்தகத்தின் பெயரும் தெரியவில்லை. ரவி சுப்ரமணியம் என்பது ஒரே பெயர் என்பதும் தெரியவில்லை. எதன்பொருட்டு இந்த காம்பியரிங் கூத்து? ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்குபவர்களோ, உயிர்மை வெளியீட்டு விழாவுக்கு வருபவர்களோ காம்பியரிங் கண்டு மயங்குபவர்கள் இல்லை. அப்படி மயங்குவதற்கு நிஷாவும் பிரமாதமான பிஹர் இல்லை. (அதற்கு தமிழச்சியே தேவலாம்). அந்த பொண்ணுக்குு பல தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கவேத் தெரியவில்லை. அழைப்பிதழில் 'தேணுகா, கும்பகோணம்' என்பது மாதிரிதான் போடுவார்கள். அதைப்படித்துவிட்டு, 'தேணுகா கும்பகோணம் அவர்கள் இப்போது பேசுவார்' என்று கூத்தடித்தார்கள். கடைசியில் 'இந்த புத்தகத்தை இன்னாருக்கு டெடிகேட் செய்கிறேன்' என்று சொல்லாததுதான் பாக்கி என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் ஒருவர்.

------00000----------00000------0000000000000--------

இதற்கு அடுத்து புக் பாய்ண்ட் அரங்கில் சாருவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா. சினிமா கலருக்காகவா என்னவென்று தெரியவில்லை, இயக்குநர் அமீரையும், சசிக்குமாரையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மிக நேர்மையாக 'புத்தகத்தை வெளியிட சொன்னாங்க. இதை நான் படிக்கவும் இல்லை. படிச்சாலும் புரியாது. நமக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூரம்' என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள். (முன்பொருமுறை தீராநதி பேட்டியில் 'நீங்கள் கிராமத்தின் அடர்த்தியான நுட்ப வாழ்வை, கலாசார எதிர்நிலையை சொல்லியிருந்தவிதம் பற்றி..?' என்ற ரீதியில் அமைந்த கேள்வியொன்றை கடற்கரை கேட்க, 'நீங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை. நான் அப்படி நினைச்சு எடுக்கவும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை நான் எடுத்தேன் அவ்வளவுதான்.' என்று அமீர் சொல்லியிருந்த பதில் நினைவுக்கு வருகிறது). சில நாட்கள் கழித்து லீனா மணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கும் அமீர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கும் தெளிவாக 'பருத்திவீரன் பார்த்துட்டு என்னைப் பெரிய படிப்பாளின்னு நினைச்சுட்டாங்க போல.. நமக்கு புத்தகம் படிக்கிற சோலியெல்லாம் ஆகாது' என்று சொல்லிவிட்டார். அவரின் நேர்மையெல்லாம் மெச்சப்பட வேண்டியதுதான். அவரை ஏன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்து அவரையும் சங்கடப்படுத்தி, உங்கள் புத்தகத்தையும் கேவலப்படுத்திக்கொள்கிறீர்கள்.? (லீனா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சு, பிரமாதம்.)
-------000000000---------00000000------00000000=-------

சாரு ஆன்லைன் பக்கம் போனால் தினந்தந்தியின் வரிவிளம்பரம் பார்த்தது போலிருக்கிறது. 'என்னைப்பற்றி லக்கிலுக் சொன்னது', தனக்கு வந்த வாசகர் கடிதம், தான் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுக்கும் போட்டோ, 'தினகரனில் வந்த என் போட்டோ' என்று திருவிதாங்கூர் ராஜ வைத்தியசாலை வைத்தியரின் பத்திரிகை விளம்பரம் போல இருக்கிறது.தன்னைப்பற்றி இன்னார் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி அதைப்பற்றிய உரையாடலை அடுத்த கட்டத்திற்கு தொடங்கி வைப்பதாக இருந்தால் இதெல்லாம் ஓ.கே. அதைவிட்டுவிட்டு, மற்றவர்கள் தன்னைப்பற்றி சொல்லியிருப்பதை தன் வலைப்பக்கத்தில் எடுத்துப்போடுவதெல்லாம் நல்லாவா இருக்கு? ( 'விகடனில் என் 32‍வது சிறுகதை என மெலட்டூர் நடராஜன் எழுதுவது போலிருக்கிறது). சமயத்தில் யாருடனோ சாட் பண்ணியதையெல்லாம் எடுத்துப்போடுகிறார். கண்றாவி!
--------0000000000------------000000000000-----------000000000-----

கடந்த வருடத்தின் மிக முக்கிய மொழி பெயர்ப்பு 'குழந்தை போராளி". பால்யத்தின் வாசம் மாறுவதற்குள் துப்பாக்கி ஏந்த நிர்பந்திக்கப்படும் உலகின் லட்சக்கணக்கான குழந்தை போராளிகளின் பிரதிநிதியாக தன் வாழ்வை திறந்து காட்டியிருக்கிறாள் சைனா கெய்றெற்சி. உகாண்டாவில் ஒபோடே ஆட்சிக்கு எதிராக முசெவெனி உருவாக்கிய என்.ஆர்.ஏ. படையில் தனது 7‍வது வயதில் சேரும் (நினைவிருலிருந்து எழுதுகிறேன். ஒன்றிரண்டு வயது கூடுதல், குறைவாக இருக்கலாம்) சைனாவின் ஆட்டோ பயோகிராஃபி இது. அவர் விவரிக்கும் உகாண்டாவின் கலாசாரம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தன் அப்பாவைப்பற்றி அவர் சொல்லும் விவரனை நம் மனதுக்குள் அப்பாப் பற்றி வைத்திருக்கும் சட்டகங்களை அடித்து நொறுக்குகிறது. சமயத்தில் 'இதெல்லாம் புனைவுகளா, உண்மையா' என்ற சந்தேகம் வந்தாலும் கூட வார்த்தைகளுக்கு இடையே உணர முடிகிற குருதிவாடை, உண்மையை உணர்த்துகிறது.

பிறகு என்.ஆர்.ஏ.வில் இணைவதும், தன்னைவிட கணமான துப்பாக்கியை சுமந்துகொண்டு பல களங்களில் சமர் புரிந்ததுமாக‌ அவர் விவரிக்கும் வரலாறை குழந்தையின் மனநிலையில் இருந்து உணர்ந்துகொள்ளும்போது ரணம் மிகுந்ததாகிறது. 'நாங்கள் குழந்தைப் போராளிகள். வேறு யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள். நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். உயிர்பயம் தெரியாது. பொய் அறியமாட்டோம். அதனால் நாங்கள் அவர்களுக்குத் தேவையாய் இருந்தோம். முசேவெனி உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் உகாண்டா குழந்தைப் போராளிகளில் நானும் ஒருத்தி' என்று சொல்லும் சைனா பிற்பாடு அதே முசேவெனியில் அரசிடமிருந்து தப்பியோடி தஞ்சம் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இதற்கிடையே தனக்கு வந்துபோகும் காதல்கள், திருமணம், குழந்தை, குடிப்பழக்கம் என யாவற்றையும் மறைக்காமல் சொல்கிறார். தென் ஆப்ரிக்காவில் சிலகாலம் தஞ்சம் புகுந்து கடைசியாக‌ டென்மார்க்கில் அடைக்கலம் அடைந்த‌ சைனா கெய்றெற்சி, இப்பொதும் அங்கேயே வசிக்கிறார். இந்தப் புத்தகத்தை டச்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் இலங்கையை எழுத்தாளர் தேவா. விடுதலைப் புலிகளூம், சிங்கள ராணுவமும் குழந்தைப் போராளிகளை தங்கள் படைகளில் வைத்திருப்பதாக பல காலமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த மண்ணைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்திருப்பது பொருத்தமானது.புத்தகத்தின் பல இடங்களில் காணக்கிடைக்கும் வரிகள், விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனத்துடன் பொருத்திப் பார்க்க வைக்கின்றன. மொழிபெயர்ப்புக்கே உரிய அந்நியமான மொழியல்லாது, மொழியாக்கமாக ஆக்கப்பட்டிருப்பது சிறப்பு. தமிழின் மிக முக்கியமான பிரதிகளில் ஒன்று. (நல்ல அச்சுக்கட்டுடன் 180 ரூபாய் என்ற குறைந்த விலையில் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கும் கறுப்புப் பிரதிகள் நீலகண்டனுக்கு நன்றியும்,வாழ்த்தும்.)
--------0000000000-----------0999999-----------0000000======

கொரியன் மாடல் செல்போன்களை தடை செய்யும் நடவடிக்கைக்கு அவற்றில் ஐ.எம்.இ. நம்பர் இல்லை என்றும், அந்த போன்களை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தினால் கண்டறிய முடியாது என்றும் காரணம் சொல்கிறார்கள். நோக்கியா, மோட்டரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் போன்ற மிகப்பெரிய செல்போன் நிறுவனங்களின் அரசியல் எதுவும் இதன் பின்னால் இல்லை என நம்பக்கடவது..!
-------00000000--------00000000-------000000

நான் பிளாக் எழுதி கொள்ளகாலம் ஆகிறது. இப்போது உள்ள பலருக்கு என்னைத் தெரியாது. இன்னமும் எழுதுற பழைய ஆளுங்க, என்னுதையும் படிக்கச் சொல்லி கொஞ்சம் விளம்பரம் பண்ணுங்கப்பா..:)

26 கருத்துகள்:

வெயிலான் சொன்னது…

ஆழியூரான் பதிவுகளை எல்லாரும் படிங்கப்பு! வெளம்பரம் பண்ணியாச்சு.

மொட்டையெல்லாம் போட்டு கெட்டப்ப மாத்தியாச்சு போல?

ஆ.வி யில நகைச்சுவைக் கதை நல்லாருந்தது.

ஆழியூரான். சொன்னது…

நன்றி வெயிலான்.

சரவணகுமரன் சொன்னது…

// 'நீங்கள் கிராமத்தின் அடர்த்தியான நுட்ப வாழ்வை, கலாசார எதிர்நிலையை சொல்லியிருந்தவிதம் பற்றி..?' என்ற ரீதியில் அமைந்த கேள்வியொன்றை கடற்கரை கேட்க, 'நீங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை. நான் அப்படி நினைச்சு எடுக்கவும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை நான் எடுத்தேன் அவ்வளவுதான்.' //

:-)

தம்பி சொன்னது…

பூக்கடைக்கே விளம்பரமா....

லக்கிலுக் சொன்னது…

SOOOOOOOOPER :-)

WELCOME BACK

அனுஜன்யா சொன்னது…

welcome back. இதுதான் முதல்முறை நான் உங்கள் வலைப்பூவிற்கு வருவது. நல்லா இருக்கு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைச் சரி பாருங்கள் :)

அனுஜன்யா

KVR சொன்னது…

//அடர்த்தியான நுட்ப வாழ்வை, கலாசார எதிர்நிலையை //

கேள்வி கேக்கக்கூட இந்த எலக்கியவியாதிங்க ரூம் போட்டு யோசிப்பாங்க போல!!!

திரு சொன்னது…

நானும் விளம்பரம் பண்ணிடுறேன்.

விடுமுறைக்கு வந்த நேரம் உங்க எண்ணுக்கு கூப்பிட்டா, யாரோ உரம், கரும்பு விலை சொல்லுறாங்க. என்ன எண் மாறிடுச்சா?
:)

நந்து f/o நிலா சொன்னது…

சில்வியா குண்டலகேசி சொகமா இருக்காங்களா?

யாத்ரீகன் சொன்னது…

>> நிஷாவும் பிரமாதமான பிஹர் இல்லை. (அதற்கு தமிழச்சியே தேவலாம்)<<<

>>>டெடிகேட் செய்கிறேன்' என்று சொல்லாததுதான் பாக்கி <<<<

:-))))))))))

முக்கியமான ஒரு புத்தகத்திற்கான அறிமுகம் .. நன்றி..

அதிஷா சொன்னது…

ahaaaaaaa

அய்யனார் சொன்னது…

வாங்க ஆழியீரான்...
/லீனா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சு, பிரமாதம்/
இதற்கான காரணம்
/அதற்கு தமிழச்சியே தேவலாம்)./
இதுவா :))

ஆழியூரான். சொன்னது…

அனுஜன்யா... அதிகபட்சம் 10 நிமிடத்துக்குள் டைப் செய்து போஸ்ட் பண்ணியது. எழுத்துப் பிழைகளை மன்னித்து விடுங்கள். பாராட்டும் பின்னூட்டங்களை விட குறைகளை சுட்டிக்காட்டும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது அவசியம் எனப்படுகிறது.

gokul சொன்னது…

ஆழியூரான் அவர்களுக்கு,
வணக்கம்.நான் நீண்ட நாட்களாக உங்கள எதிர் பார்த்துகிட்டே இருக்கேன். மின்னல் கணக்கா திடீர்னு வர்றீங்க, போறீங்க.
நல்லா எழுதியிருக்கீக.இனிமே தான் ஆவி படிக்கணும்.சில்வியாவ கேட்டதா சொல்லவும். விடுங்க ஆழி. நம்ம சாருதானே...


கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

கையேடு சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கீங்க..

//செலிபிரேஷன் ரம் அடித்துவிட்டு எழுதும் இந்தப் பின்னூட்டத்தையில்//

அதனால, நாளைக்கு இதுக்கு //நான் பிளாக் எழுதி கொள்ளகாலம் ஆகிறது// கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்.
"கொள்ள காலம்" (எனக்கு)புதுசா இருக்கே

செந்தழல் ரவி சொன்னது…

சமீபத்தில் லக்கி பதிவில் சாரு ஒரு கிழவிக்கு பின்னால் வியர்வை சட்டையோடு நிற்பதை பார்த்து எனக்கு வாயால் சிரிக்கமுடியவில்லை...

ஏன் இந்த விளம்பர வெறி என்று புரியவில்லை ?

கொரியன் போன் என்று சொல்லப்படும் கந்தாயம் உண்மையில் சைனீஸ் போன்களே...

தைவானிலும் பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன...

20 டாலர் அளவில் ஐபோன் குளோன் மொத்த விலைக்கு கிடைக்குது...

அங்கே தமிழ்நாட்ல எவ்ளோ விக்குறாங்களோ தெரியாது ?

இப்போ இருக்க க்ளோபல் பைனான்ஸியல் க்ரைஸிஸ்ல இதை எல்லாம் உட்டா மொபைல் கம்பேனிக்க பட்டை நாமத்தை போட்டுக்க வேண்டியது தான்
?

ஒவ்வொரு அப்ளிக்கேஷன் கோடிங் மற்றும் ராயல்ட்டிக்கே மில்லியன் கணக்குல செலவாகும்...

ஆனா இந்த சைனீஸ் போன் MTK அப்படீன்ற ப்ளாட்பார்ம்ல - சரி விடுங்க ரொம்ப குழப்புவானேன் ? சாப்ட்வேருக்கோ - ராயல்டிக்கோ எதுவும் செலவு கிடையாது...வெறும் தகடும் ப்ளாஸ்டிக்குகளும் சேர்த்து கொண்டாந்துடறாங்க...

நான் கேள்விப்பட்டேன் சைனாவுல ஒரு இடத்துல ஒரு போன் விலை 1 டாலராம். அப்படியே கொட்டிக்கிடக்குமாம்...

தலைவிதி !!!

வெல்கம் பேக் ஆப்டர் லாங் டைம் மேன்..

பெயரில்லா சொன்னது…

/பல இடங்களில் காணக்கிடைக்கும் வரிகள், விடுதலைப் புலிகளின் மீதான விமர்சனத்துடன் பொருத்திப் பார்க்க வைக்கின்றன./

அவர் மொழிபெயர்த்ததே அதற்காகத்தான் என்று சொல்லலாம்.
அவருக்கெல்லாம் குழந்தைகள் மீது அவ்வளவு அன்பு இருந்தால், இப்போது ஸ்ரீலங்கா அரசு வீசும் குண்டுகளிலே சாகும் குழந்தைகளைப் பற்றியும் தன் அய்ரோப்பியக்கூட்டங்களிலே பேசலாமே? மாட்டார். அரசியலின் உச்சம் அது

குடுகுடுப்பை சொன்னது…

நான் உங்களோட பதிவை என்னோட ஒரு பதிவில் இணைப்பு கொடுத்திருக்கேன்.

வருங்கால முதல்வர்: தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

ஆழியூரான். சொன்னது…

கையேடு... நலமா...? 'கொள்ளகாலம்' என்றால் 'ரொம்பகாலம்' என்று அர்த்தம் 'கொள்ளநேரமாயிடுச்சு... கொள்ளகாலமாகிப்போச்சு.' என்பதெல்லாம் மதுரை வட்டார வழக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

உங்களுக்கு எதுக்கு சாமி விளம்பரம்..?

எழுத்தே போதுமே..?

அந்த குழந்தை போராளி புத்தகம் எங்கே கிடைக்கும்..?

கருப்பு பிரதிகள் பதிப்பகம் எனில் போன் நம்பர், முகவரி கிடைக்குமா..?

ஆழியூரான். சொன்னது…

என்மீது அன்புகொண்ட நந்து என்கிற நிலா....சில்வியா சுகம். கடந்த வாரம் ஆனந்த விகடன் படித்தீர்களானால், 'காதலும், தோழலும், பின்ன மார்க்ஸும்' என்ற சிறுகதையைக் கண்டிருக்கலாம். அதில் கூட சில்வியாவை நலம் விசாரித்திருந்தேன். (செலிபிரேஷன் ரம் அடித்துவிட்டு எழுதும் இந்தப் பின்னூட்டத்தில் ஏதேனும் தவரு இருந்தால் (தவரு என்பது இயல்பானது) மன்னிக்கவும்:::)))

ஆழியூரான். சொன்னது…

திரு.... ஆழிவாய்க்கால் சாதாரண கிராமம்ணே... அங்குனக்குள்ள பாதிநேரம் செல்போன் எடுக்கமாட்டேங்குது. என்ன செய்ய..? செல்போன் நம்பரு எப்பமும் போல 9840903590.

சிநேகிதன்.. சொன்னது…

sir attakasam...
welcome back !!!!

முத்துலெட்சுமி-கயல்விழி சொன்னது…

நடைவண்டிங்கறதால.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டீங்க போல.. :)

ஆழியூரான். சொன்னது…

புத்தகம் கறுப்புப் பிரதிகளில் கிடைக்கும். கறுப்புப் பிரதிகள் நீலகண்டனின் செல்போன் நம்பர் : 9444272500

குடுகுடுப்பை சொன்னது…

நான் கேள்விப்பட்டேன் சைனாவுல ஒரு இடத்துல ஒரு போன் விலை 1 டாலராம். அப்படியே கொட்டிக்கிடக்குமாம்...

//
வாங்புஜன் தெரு , பெய்ஜிங். அங்கே எல்லாத்துக்கும் டூப்லீகேட் மட்டும் கிடைக்கும்