இந்த சுதந்திரம் யாருக்கானது...?

"உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நாங்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உட்காரக்கூடாது. மரப்பலகைகளில் உட்காராமல் தனியாகக் கோணி சாக்குகளை விரித்து அமர வேண்டும். உயர் வகுப்பு மாணவர்கள் எங்களுடன் பேசக்கூடாது. பேசினால் பாவமாம். உயர்சாதி ஆசிரியர்களும் அவ்வாறே நடந்துகொண்டார்கள். எங்கள் புத்தகங்களைக் கூட தொட மாட்டார்கள். தொட்டால் தீட்டு. தண்ணீர் தாகம் எடுத்தால் நாங்களே எடுத்துக் குடித்துவிட முடியாது. உயர்சாதி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். ஒதுங்கி நின்று அவர்கள் ஊற்றும் நீரை மேலே அண்ணாந்து வாயைத் திறந்து குடிக்க வேண்டும்........ ஒரு முறை எங்கள் தந்தையாரை புகைவண்டி நிலையத்துக்கு வரச்சொல்லிவிட்டு, நானும் என் சகோதரனும் அங்கு சென்றோம். ஆனால், அவருக்கு நாங்கள் வருவது குறித்து அனுப்பிய தகவல் சென்று சேரவில்லை. இதனால் ஒரு மாட்டுவண்டி ஒன்றில் தந்தையாரின் இருப்பிடத்துக்குச் சென்றோம். சென்றுகொண்டிருக்கும்போதே உயர்சாதியைச் சேர்ந்த அந்த வண்டியோட்டி நாங்கள் யார் என்பதை தெரிந்து தன் வண்டியே தீட்டாகிவிட்டதக எண்ணி கீழே குதித்து மாட்டை அவிழ்த்துவிட்டு வண்டியை குடைசாய்த்துவிட்ட...