கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!
மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நிறைவாழ்வு வாழ்வது போலவும், கனவு காணத்தெரியாமல்தான் சிரமப்படுகிறார்கள் என்பது போலவும் வந்த நாள் முதலாய் ஒட்டுமொத்த நாட்டையும் கனவுக் காணச்சொல்லி சாமியாடிக்கொண்டிருந்தார் அரசவை கோமாளி ( நன்றி: புதிய கலாசாரம்) அப்துல் கலாம்.
கிராமங்களில் பத்து நாள் திருவிழாவின் நாடகங்களில் ஒரே பப்பூன் தினமும் வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுமென தினமொரு நபர் பப்பூனாக வருவது போல, ஐந்து வருடங்களுக்கொரு முறை அரசவை கோமாளி மாற்றியமைக்கப்படும் வைபவத்தில் இப்போது அப்துல் கலாமுக்கு 'நன்றி, வணக்கம்' சொல்லிவிட்டனர். அடுத்த கோமாளி தயாராகிக்கொண்டிருக்கிறார்.
எல்லோரையும் கனவு காணச்சொன்ன அப்துல் கலாம், இன்னொரு முறை அதே நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கனவு கண்டார். ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..?
1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.
2. 'ஒட்டன்சத்திரம் மூலம் பௌத்திரம் டாக்டர் கே. என். ராய், ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தார்..' என்பது மாதிரியான கேணத்தனமான பத்திரிகை செய்திகளிலிருந்து மக்களுக்கு விடுதலை
3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.
4. 'ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..' என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.
ஜனாதிபதி வருகிறார் என்றால், அந்த விழாவுக்கு வர வேண்டிய பள்ளிக் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் வேலை, அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் குழந்தைகள் யார், அவரது பெற்றோர்கள் யார், விழா நாளன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஏராளமான முன் தயாரிப்புகள் உண்டு. ஜனாதிபதியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை முன் கூட்டியே எழுதி வாங்கி விடுகின்றனர். விழா நடக்கிற தினத்தில் ஜனாதிபதி வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அரங்கத்தில் அல்லது அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றனர். பல இடங்களில் ஜனாதிபதியை வரவேற்க பள்ளி மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். இதிலிருந்தெல்லாம் இனி அவர்களுக்கு விடுதலை. ( தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)
5. 'இந்தியாவோட ஜனாதிபதியே ஒரு முஸ்லிம்தான்.. அப்புறமென்ன..?' என்ற காவிகளின் போலி கூக்குரல் ஒழியும். முதலாளியே தொழிற்சங்கம் அமைப்பதுபோல, காவிக்கூட்டத்தால் முன்னிருந்தப்பட்ட 'சிறுபான்மையினரின் பிரதிநிதி'யான அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்ததற்காக சங் பரிவாரங்கள் வேண்டுமானால் பெருமை கொள்ளலாமே ஒழிய, இஸ்லாமியர்கள் பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை.
6. புத்தர் சிரிப்பார்.
இனி அப்துல் கலாம் என்ன செய்யலாம்..?
1. 'கனவு காண்பது எப்படி..?' என்றோ, 'கனவுகளும், அதன் பலன்களும்' என்றோ இந்தியாவின் எல்லா மொழிகளிலும் புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எலிமண்ட்ரி ஸ்கூலிலும் போய் அதனை விற்பனை செய்யலாம்.
2. ஊர், ஊருக்கு கனவு காண்பது எப்படி என்று பயிற்சி பட்டறை நடத்தலாம். அவரே நேரடியாக கனவு கண்டு செய்முறை பயிற்சி அளிக்கலாம்.
3. காசியிலோ, கங்கையிலோ குடிசை அமைத்து 'வல்லரசு நமக, வல்லரசு நமக' என்று யாகம் செய்யலாம்.
4. தன்னை ஒரு முழுமையான சுயம் சேவக் என அறிவித்துவிட்டு, ராமேஷ்வரம் டூ ராஷ்ட்ரபதி பவன் ரத யாத்திரை போகலாம்.
5. வாஜ்பாயை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று மூட்டு வலிக்கு மருந்து போடலாம்.
6. ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில், 'அப்துல் கலாம்னா, தொப்பி வச்சுக்கிட்டு தொழுகை பண்ணுவேன்னு நினைச்சியா..? என் பழைய ரெக்கார்ட்ஸையெல்லாம் எடுத்துப் பாரு..' என்று சுஜாதா எழுதும் வசனத்தைப் பேசி ஒரு கெஸ்ட் ரோல் பண்ணலாம். செவ்வாய் கிரகத்தில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை 2020-க்குள் ஒழிப்பது குறித்து அடுத்த படம் எடுக்க ஷங்கரை வற்புறுத்துவதோடு, அதற்கான விஞ்ஞான பூர்வ திரைக்கதையை சுஜாதாவோடு இணைந்து தயாரித்து அரங்கனின் காலடியில் வைத்து சேவிக்கலாம்.
7. 'குடிமகனாய் இருக்கும் நீங்கள் முதல் குடிமகனாக மாறுவது எப்படி..?' என மணிமேகலை பிரசுரத்தில் புத்தகம் போடலாம்.
8. குமுதத்தில் எப்படியாவது இடம் பிடித்து, 'கண்ணைத் திற.. கனவு வரட்டும்' என ஆன்மிகம் கலந்த அறிவியல் தொடர் எழுதலாம்.
9. 'ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் எனக்கும் பதினாலு தலைமுறை உறவு இருக்கு. அதனால என்னை அங்க அர்ச்சகரா நியமிக்க சிபாரிசு பண்ணனும்' என காஞ்சி 'காம'கோடி சங்கராச்சாரியிடம் அப்ளிகேஷன் கொடுக்கலாம்.
10. மலைச்சாமி தேர்தல் கமிஷனராக இருந்து பதவிக்காலம் முடிந்ததும் அ.தி.மு.க.வில் சேர்ந்து சேவை செய்ததைப் போல அப்துல் கலாமும், அ.தி.மு.க.வில் சேரலாம். கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்.
11. சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு 'பாபா மரித்தார்' என பெயர் வைக்கலாம்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாததால் யார் யாருக்கெல்லாம் நஷ்டம்..?
1. பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு கோமாளி கேரக்டர் போய்விட்டது.
2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.
3. ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.
கருத்துகள்
:)
பெரிசு பதவிக்காலங்களில் பள்ளி பள்ளியாக சுற்றியதாக சொல்லுகிறார்கள்.. அதில் அனேகம் தனியார் பள்ளிகள் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும். (கலாம் 5வகுப்புவரை அரசு பள்ளியில் படித்தவர் தான்)
பதிவு போடும்போது அடுத்தவர்களை வாழ்த்தி பதிவு போடுங்கள், ஒருவேளை இது நீங்கள் போடும் கடைசி பதிவாகவும் இருக்கலாம்
என்னய்யா! கொலை மிரட்டல் எல்லாம் வருது? பெரிய ஆளாகிட்டீங்க போல ;)
புள்ளிராஜா
2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.
3. ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.//
Very good Shot....
ஒரு அனானி உங்களை சந்திரன் என்று சொன்னதுடன் அல்லாமல் தன்னையும் நாய் என்று குறிப்பிட்டிருந்ததை கவனீத்தீர்களா ஆழியுரான்?
அசுரன்
கவனித்தேன் அசுரன். இதைவிட சிறந்த சூடு அந்த அனானிக்கு தேவையா என்ன..? சொல்வதை உண்மையான முகத்தோடு சொன்னால், வாதங்களை முன் வைத்தால் தாராளமாக எதிர்வாதம் செய்யலாம். இது போன்ற தைரியமில்லாததுகளை திருத்த முடியாது.
பா.ஜ.க.தான் இவருக்கு பொருத்தமான கட்சி. தலைவராகக் கூட ஆகலாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிபூரண ஆசியும் இவருக்கு உண்டு.
andha padhaviye oru alangara padhavi thaan irunthalum angaiyum oru sela niyangalai seithar...the first president who returned a bill to reconsider its decision (office of profit bill) was Kalam...
kanavu kanpaithai kindal pannura ungala parthu ennakku siripu thaan varuthu...kulanthaikal edhai kanavu kanukirarkola adhu pola vara thaan muyarchi seivarkal...adhai oru president sollum podhu 1000 perula oruthar adhai kettu nalla kanavu kandal adhu nalladhaka thaan irukkum...
nakkal pannuratheye kadamaiyaga kondal yarai vendumanalum panalam...idhu varaikum iruntha presidentsa vida ivar evlovo mel....ipothu parthal vara pogura presidenta vida ivar 1000 thadavai mel...
:-))
ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.
Do u think common people should not go and and meet president?..in this line u r insulting common man(i know ur intention is not to insult them)
பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.
correct...one should give empty promises
'ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..' என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.
The torture to children u mention...dont blame kalam for this...its done for all leaders in india.... apart from this, he is closer to choldren, you know...thats waht inportant...If a northen leader like nehry does this we will appreciate...But we praised by all...cant tolerate a tamil man get
சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு 'பாபா மரித்தார்' என பெயர் வைக்கலாம்.
what u want to tell from it?..I think u tried be humurous...but it not make me laugh....it is neither humour nor informative... this makes all good points of ur article lose its credibility...
u r write tamil well..have craetivity ..if u write with more responsibilty definitle ur points will reach correctly..otherwise it will be seen as empty words without contents as abdul kalam's india becoming vallarasu and by dream v become happy...
anbudan,
kumar, chennai-600005
*******'கிராமப்புறங்களில் இருக்கும் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதன் மூலம், அங்கு சிவப்பு அரசியல் அதிகாரம் உருவாக்கப்படும், பின்னர் கிராமப்புற சிவப்பு அரசியல் அதிகாரம் நகர்புறங்களை சுற்றி வளைக்கும். இந்த செயல் திட்டத்தின்படி புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்து 1972-ல் செங்கோட்டையில் சிவப்புக் கொடி ஏற்றப்படும்..' என்று, கற்பனாவாத அரசியலை முன்வைத்து, அதற்கு இலக்கும், காலக்கெடுவும் நிர்ணயித்து செயல்பட்ட சாரு மஜூம்தாரின் எண்ணங்களை தமிழகத்தில் செயல்படுத்தியவர்தான் புலவர் கலியபெருமாள்.*******
இது போன்ற கனவுகள்தான் மக்களை, சமுதாயத்தை மேம்படுத்தும்....
கனவு தவறல்ல....என்ன கனவு என்பதுதான் முக்கியம்....
2.சாமான்ய, எளிய மனிதன், பெரிய மனுஷஙக்ளோட போட்டோ எடுத்துக்ரத கின்டல் செய்றீங்க.....Hurt me lot....
i not have google id...thats y i publish as anonymous..sorry...
ganesh
இக்கட்டுரை ஏற்படுத்தும் தாக்கம் வியப்பளிக்கிறது! :-)))))
அது போல, ஒரு தமிழன் புகழ் பெற்றால் நமக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்....அடிதட்டு மக்கள், சாமான்ய மக்கள் , எளியவர்களுக்கு ஒரு சந்தோஷம் என்றால் , ஒரு வித பயம் தோன்றும்.....
இதுதான் கலாம் அவர்களை விமரிக்கவும், எளியவர்கள் அவருடன் பேசுவது, புகைபடம் எடுப்பது ஆகிவற்றை கிண்டல் செய்யவும் , காரணமாக இருக்கிறது...... மற்ற்வர்கள் இதை செய்யும்போது , அதை புறக்கணித்து விட்டு நகரலாம்....ஆனால் ஒரு நல்ல தமிழ் நண்பரும் இந்த வலையில் விழுந்து தடுமாரும்போது சுட்டி காட்டுகிரோம்....... நல்ல வேளை, மற்ற கட்டுரைகளை படித்து விட்டு, கடைசியாக இதை படிதேன்,,,,,இதை முதலில் படித்து இருந்தால், இவரயும் ஒரு சராசரி வயிதெரிச்சல் ஆசாமி என்று தவறாக நினைத்து, மற்ற அருமையான கட்டுரைகளை தவற விட்டு இருப்பேன்.....
பராவியில்லை....ஒரு திருஷ்டி பரிகாரமாக இன்த க்ட்டுரை அப்படியே இருக்கட்டும்...
குமார்,சென்னை 6000005
கம்யுனிஸ்டுகள் மக்கள் பிரச்சனையை சொல்லி அதற்க்கு தீர்வு காண கனவு கண்டார்கள் . கலாம் மக்கள் பிரச்சனைக் குறித்து பேசுவதேயில்லையே... ஏன்?
ஏதேதொற்கோ தானே வலிய முன் வந்து வாய்ஸ் கொடுக்கும் கோமாளி கலாம், பட்டினி சாவுகள் நிகழ்ந்த போதும், மணிப்பூரில் ராணுவம் அட்டுழியம் செய்து நாடே அல்லேலோகல்லேலோ பட்ட போதும், மத வெறி கலவரங்கள் போதும், சட்டமன்ற நாடாளுமன்ற ஊழல்கள் நாறி புழுத்த போதும், கல்வி தனியார்மயமான போதும், நாட்டின் வளங்கள் கூட்டிக் கொடுக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும், விவசாயிகள் லட்சக்கனக்கில் இன்று வரை தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்தும் ஒரு வரி கூட பேசியதில்லையே?
இவருடைய கனவுகள் யாருக்கானது? 12 ரூபாயில் ஒரு நாளை கழிக்கும் 30% இந்தியர்களுக்கானதா? 60% ஊட்டச்சத்து குறைபாடான, போதிய உணவு கிடைக்காதா இந்திய குழந்தைகள், சிறுவர்களுக்கானதா?
இவருடைய கனவுகள் எல்லாம் ஏற்கனவே சமூக பார்வையற்ற மேட்டுக்குடிகளின் வாரிசுகளை இன்னும் சமூக பார்வையற்ற போதையில் மயக்கி வைக்கும் மேட்டுக்குடி கனவுகளே.
ஓரளவு அறிவு வளர்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்த
பின்தங்கிய பொருளாதாரத்தை சேர்ந்தவனையும் சேர்த்து மயக்கி தனது வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாக பார்க்கும் அல்பவாதிகளை உருவாக்கும் கனவுகளே.
இதற்க்கு சாருமஜும் தருக்கும் பொருத்தம் போடுவது முற்றிலும் தர்க்க அடிப்படையற்ற ஒரு முயற்சி(சாருமஜும்தரினுடைய அந்த கருத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்து தவறு என்றூ விம்ர்சித்த கம்யுனிஸ்டுகளும் உண்டு. அது இங்கு விவாதிகக் வேண்டாம்).
ரஜினி கூடத்தான் கறுப்புப் பணத்தில் படம் எடுத்து, டிக்கெட் விலையேற்றி கறுப்புப் பணத்தை இன்னும் அதிகமாக் சேர்த்து விட்டு கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்து கனவு காட்டுகீறார்.
நாடே பறி போகிறது. அதற்க்கு மாமா வேலை பார்க்கிறார்கள் வோட்டு கட்சிகள், அதற்க்கு விளக்கு பிடித்து ரப்பர் ஸ்டாம்ப் குத்தி அங்கீகாரம் வழங்குகிறார் கலாம். இந்த் உண்மைகளை மறைக்க கனவு காண் என்று ஒரு பொய் பிரச்சாரம் வேறு.
அசுரன்
//3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.//
குறைந்த பட்சம் இது எப்படி சாத்தியம் என்று நண்பர்கள் விளக்கினால் அந்த போதைக் கனவின் பொய்களை முடிச்ச்விழ்க்க எங்களுக்கு சுலப்மகா இருக்கும்.
// தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)
//
இந்த வரிகளிலிருந்து எனக்கு புரிந்தது கலாம் குழந்தைகளை தனது சுய விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான். நண்பர்கள் இந்த வரிகளுக்கு வேறு அர்த்தம் கொடுத்து விளக்கினால் நாம் மறுத்து எதிர்வினை தொடுக்க வச்தியாக இருக்கும்.
இது தவிர்த்து அப்பட்டமான RSS வெறியனான ரவி சங்கர் என்கிற மனித குல விரோதி நாயுடன் போட்டோ எடுத்து அதற்க்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுக்கும் காலித்தனத்தை செய்த கலாம், ஒரு அரசு தலைவராக வெகு மக்கள் பிரச்சனை குறித்து, இன்றைய பொருளாதாரத்தின் சீரழிந்த நிலை குறித்து என்னவிதமான செயல்பாட்டைக் கொண்டுள்ளார்?
ரஜினியின் பகட்டு பேச்சுகளுக்கு மயங்கும் மக்கள்தான் கலாமின் அதே விதமான பகட்டு பேச்சு மயங்குகிறார்கள். யாதார்த்தை புரிந்து கொள்ள பழகுங்கள் நண்பர்களே.
அசுரன்
//////:::::""""ஏதேதொற்கோ தானே வலிய முன் வந்து வாய்ஸ் கொடுக்கும் கோமாளி கலாம், பட்டினி சாவுகள் நிகழ்ந்த போதும், மணிப்பூரில் ராணுவம் அட்டுழியம் செய்து நாடே அல்லேலோகல்லேலோ பட்ட போதும், மத வெறி கலவரங்கள் போதும், சட்டமன்ற நாடாளுமன்ற ஊழல்கள் நாறி புழுத்த போதும், கல்வி தனியார்மயமான போதும், நாட்டின் வளங்கள் கூட்டிக் கொடுக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும், விவசாயிகள் லட்சக்கனக்கில் இன்று வரை தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்தும் ஒரு வரி கூட பேசியதில்லையே?""":::::::////
ந்ல்ல கேள்வி...... உங்களுக்கு ஜனாதிபதியோட அதிகாரம் என்னவென்று தெரியாதா?இதை பற்றி அவர் பேசி எதுவும் ஆக போவதில்லை.... இது பதவியின் தவறு, அமைப்பின் தவறு....க்லாம் தவறு அல்ல....அடுத்து வர போகும் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற ஜனாதிபதியும் இப்படிதான் இருப்பார்... குறைந்த பட்சம், இவவளவாவது பேசினாரே என்று கலாம் பற்றி மகிழ்ச்சி தான் நமக்கு ஏற்பட வேன்டும்...வேறு யாரும் இப்படி இருந்தது இல்லை
//////ஊத்தவாயன் ஜெயேந்திரனுக்கும், வணங்காமுடி சாய்பாபாவிற்கும் அவர்களின் வி.ஐ.பி. அடிமை பக்தர்களில் ஒருவர் குறைந்துவிடுவார்.//
Very good Shot.... /////
no asuran....its very bad shot...
இதற்கு பதிலாக, பெண் வெறியன் , கொலை காரன் என்று சொல்லி இருக்கலாம்....உடல் குறையை சொல்லுவது சரி அல்ல....
.////// பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.//
குறைந்த பட்சம் இது எப்படி சாத்தியம் என்று நண்பர்கள் விளக்கினால் அந்த போதைக் கனவின் பொய்களை முடிச்ச்விழ்க்க எங்களுக்கு சுலப்மகா இருக்கும்./////
அவ்வளவு பெரிய இலங்கை ராணுவத்தின் பீரங்கியை, வெறும் கை துப்பாக்கிடன் சில நூறு தமிழ் வீரர்கள் எதிர்த்து நின்ற போது அது முட்டாள் தனமாகத்தான் பார்க்கபட்டது....ஈழம் வெறும் வறட்டு ஜம்பமாகதான் கருதபட்டது..இன்று நிலை வேறு....
எங்கள் பாட்டன் சொல்லி இருக்கிறான்.... உள்ளுவது எல்லாம் உயர்வுள்ள்ல்,
anbudan, Ganesh- chennai
அசுரனின் பதிலுக்கு எதிரிவினையாற்றியிருக்கும் நீங்கள், கலாம் வகிக்கும் ஜனாதிபதி பதவி என்பது ஒரு அதிகாரமற்ற/வெளங்காத பதவி, அதன் வாயிலாக அவர் எதுவும் செய்ய இயலாது என்று சொல்லியிருக்கிறீர்கள்.
/அவர் பேசி எதுவும் ஆகப்போவதில்லை/ என்ற உங்கள் வார்த்தையை, கயர்லாஞ்சியில் ஒரு தலித் பெண்ணை கற்பழித்து கொலை செய்தது குறித்தோ, நந்திகிராம் படுகொலைகள் குறித்தோ, பஞ்சாப் தேரா தத்தா படுகொலைகள் குறித்தோ கலாம் வாய்ஸ் கொடுத்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை என்றே எடுத்துக்கொள்கிறேன். அப்படி ஒரு 'அதிகாரம்' மிக்க பதவியிலிருக்கும் அவர்தான், 'அமெரிக்கா போல இந்தியாவிற்கும் இருகட்சி ஆட்சிமுறைதான் சிறந்தது..' என சில நாட்களுக்கு முன்பு திருவாய் மலர்ந்தார். அதே வாயால், குஜராத் கலவரம் குறித்தோ, மும்பை குண்டு வெடிப்புக் குறித்தோ கருத்து சொன்னாலென்னவாம்..?
சரி... அதை விடுங்கள். அதில் அவர் கருத்துதான் சொல்ல முடியும். முடிவெடுக்க முடியாது. அப்சல் தூக்குத் தண்டனையின் கருணை மனு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டியது அவர்தான். அந்த மனு அவர் கரங்களில்தான் பல மாதங்களாக தூங்குகிறது. ஒன்று தூக்கில் போடுங்கள்.. இல்லை மன்னித்து விடுதலை செய்யுங்கள். 'எந்த முடிவையும் எடுக்காமல் எல்லோருக்கும் நல்லப்பிள்ளையாகவே இருப்பேன்' என்றால் எப்படி..?
எளியவர்கள் ஜனாதிபதி மாதிரியான உயர் பதவியிலிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை நான் நக்கலடிக்கிறேன் என்கிறீர்கள். 'இதுநாள் வரைக்கும் ஜனாதிபதி மாளிகைக்குள் எளிய மனிதர்கள் சாதாரணமாக நுழைய முடிந்ததா.. கலாம் அதை எளிமைப்படுத்தியிருக்கிறார்' என்கிறீர்கள். உண்மைதான். யாராவது அவருக்கு கடிதம் எழுதினால் -சுய விலாசமிட்ட அஞ்சலட்டை இணைத்து அனுப்ப வில்லையென்றாலும் கூட- அப்துல் கலாம் பதில் போடுவார். இதற்கு செலவழிக்கும் நேரத்தின் சில நிமிடங்களை செலவிட்டு அப்சல் தூக்குத் தண்டனையில் ஒரு முடிவெடுக்கலாமே என்ற ஆதங்கம் ஒரு பக்கமிருக்க- தன் இயலாமையை, கோமாளித்தனத்தை, இப்படி பள்ளிக் குழந்தைகளின் கைகளில் ஆட்டோகிராஃப் போட்டு சாமர்த்தியமாக மறைத்துக்கொள்கிறாரோ என்பது என் சந்தேகம்.
இப்படியொரு அதிகாரமில்லாத பதவியிலிருந்து, இப்போது வெளியிலும் வரப்போகும் அப்துல் கலாம், தன் பதவிக்காலத்தின் இடையிலேயே 'இது ஒரு மரப்பாச்சி பதவி. இதை வைத்து, ஜனாதிபதி மாளிகையின் ரோஜா தோட்டத்தை விருந்தினர்களுக்குச் சுற்றிக்காட்டுவதைத் தவிர உருப்படியாக வேறெதுவும் என்னால் செய்ய முடியவில்லை..' என்று கருத்து சொல்லியிருந்தால் ஓ.கே. ஆனால் அப்படி சொல்லாததோடு, அந்த அதிகாரமில்லாத பதவிக்கு இன்னொரு முறை வர ஆசைபடுகிறவராக இருக்கிறாரே..என்ன செய்ய..?
அப்புறம் ஜெயேந்திரனை ஊத்தவாயன் என்று திட்டியதற்கும், சாய்பாபாவை வணங்காமுடி என திட்டியதற்கும் உடல் குறைப்பாட்டை சொல்லாதீர்கள் என்று வருத்தப்பட்டியிருக்கிறீர்கள். இது, 'நிறுவப்பட்ட எல்லைகளுக்குள் உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள்' என்ற அதிகார வர்க்கத்தின் குரலையொத்த நடுத்தர வர்க்கத்தின் குரல்தான். நீங்களும் கூட ஜெயேந்திரனை கொலைகாரன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறீர்கள். ஜெயேந்திரன் கொலைகாரனும் கூடத்தான். அதிலொன்றும் மாற்றுக் கருத்தில்லை. நானும் ஒன்றும் ஜெயேந்திரனின் வாய் துர்நாற்றம் பொறுக்க முடியாமல் அந்த வார்த்தைகளை எழுதவில்லை. என் வார்த்தைகளின் கோபம் சுட்டும் திசை உங்களுக்கும் புரிகிறது. ஆனால், நடைமுறையிலல் உள்ள வரம்புகளை மீறி திட்ட வேண்டாம் என்கிறீர்கள். அதில் ஒன்றும் பிரச்னையில்லை. இனிமேல், ஜெயேந்திரனை ஊத்தவாயன் என்று சொன்னதை வாபஸ் வாங்கிக்கொண்டு, உங்கள் விருப்பப்படியே கொலைகாரனென்று சொல்ல பழகிக்கொள்கிறேன்.
தற்போது இரு தரப்பு வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், உங்கள் வாதம் தெளிவாக புரிகிறது....
others may accept it or not...but ur views should be clear..
let me illustrate.... I dont know any thing about ரவி சங்கர் ....but when i read the asuran's response which says ///"இது தவிர்த்து அப்பட்டமான RSS வெறியனான ரவி சங்கர் என்கிற மனித குல விரோதி நாயுடன் போட்டோ எடுத்து ""//// it gives me a picture about ravishankar..instead of that if it is written that கோமுட்டி தலயன், முட்டை கண்ணன் etc means i would have missed that point..i will understand the author disliked ravishankar..thats all....it will traet it as a childish abuse..nothing more than that..
////அப்புறம் ஜெயேந்திரனை ஊத்தவாயன் என்று திட்டியதற்கும், சாய்பாபாவை வணங்காமுடி என திட்டியதற்கும் உடல் குறைப்பாட்டை சொல்லாதீர்கள் என்று வருத்தப்பட்டியிருக்கிறீர்கள். இது, 'நிறுவப்பட்ட எல்லைகளுக்குள் உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள்' என்ற அதிகார வர்க்கத்தின் குரலையொத்த நடுத்தர வர்க்கத்தின் குரல்தான்////
no...you missed the point.... I am entirly talking with communication angle....
in above sentece, ur language is so childish and resembles Gavundamani- senthil comedy language....it will devalue entire article....
tell whatever u want... but it should have substance....
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின் வலிமை- bharathi...
ok... thats all from me.... ur recent article was nice,,,enjoyed.... its difficult to belive both r written by same person :-)
Ganesh- chennai
2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.
புத்தர் சிரிப்பார். // வாத்யாரே கலக்கறேள் போங்கோ...நான் போன ஜென்மத்தில் ஒரு பதிவு போட்டேன் சமயம் இருந்தா படிங்க... இல்லாட்டியும் படிங்க http://selventhiran.blogspot.com/2007/06/blog-post_1810.html
உண்மை. சாதாரண வார, மாத பத்திரிகைகளை படிப்பவர்கள்... சேட்டிலைட் சேனல்களை பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு மாயை ஏற்படுகிறது. எனக்கு அந்த மாயை இருந்தது :-)
பல கேள்விகள் நச்! இதுபோல..
/தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை../
சில கேள்விகள் ...
/கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்./
ஏன் இப்படி? அவ்வளவு கோபமா..?
:(
::))
//Hello all!! This is my first blog!! And, I would request all of you to pour in your comments which I would really appreciate.Thanks!!
There were many articles in magazines,many blogs and many comments by eminent leaders(??) about the second term as The President for Dr.Abdul Kalam. Dr.Jayalalitha went to the extent of calling Prathibha Patil's candidature " A Joke played on the Nation!! "And, She called Karunanithi a betrayer! He betrayed TamilNadu people not supporting a Tamil Candidate!! All these talks just made me laugh and laugh.. I just started thinking what has this Dr.Kalam done specially for the improvement of India?? I'm very sure that I'll definitely get oppositions from many readers after I finish this article. Yet, I always have the responsibility to answer them all.
And We humans, possess the ability to think. We obviously get a question.. Why should Abdul Kalam be made the President again? What special qualities does he possess to become the President for the second time while there was only one man in the Indian history who had enjoyed it twice? Dr. Rajendra prasad.
Dr.Kalam,the so called well wisher of children of India, the so called well wisher of Indian Youth has miserably failed in giving his opinion on many issues which involved Education and Children. He had always talked in support of Children's welfare in public meetings and whenever he met students. " The Reservation for OBC's" issue which really made many students fast and do strikes.. The same Kalam didn't even give his opinion on this. The same happened with the entrance examination case. He didn't give his opinion about abolition of the Entrance Examinations for students entering into Engineering after 12 th Standard,which was an important issue then.. But, still he remains the HERO of many young people of India,which really surprises me..
He was more of a rubber stamp president except few cases like the return of OOP(Office Of Profit) bill,with some suggestions . No one can forget that he was in Russia while giving the order for dismissal of Nitesh Kumar's Govt in Bihar!! I read a article in "Ananda Vikadan" by Mr.Gnani. A very nice article questioning the same. I really appreciate his boldness for writing such an article in one of the most popular weeklies in TamilNadu.
Above all, Dr.Kalam didn't want the second term at all, initially. Later, When some parties like UNPA and NDA extended support he said he would contest if there is certainty!!Isn't it a joke played on nation?? How would a president say I'll contest if it's sure that I'll win!?? Didn't he degrade himself by saying so?? I still don't find answers to these questions.. Please help me find the answers! //
Firstly, I don't know how to use tamil conversion software and so I am commenting in english.
Did you watch the news when Prathibha Patil was chosen to be the candidate and Dr.Kalam said that the selection was "FANTASTIC" . Kindly check out the news before commenting that he was craving the second term!
ஆனால், முடியவில்லை. வீழ்ந்துபோன அவரது கனவால் நாட்டில் பல பேர் சந்தோஷக் கூத்தாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.
The youth of India including me who are greatly inspired by Dr.Kalam are not happy.
கலாம் காலியானதால், யார், யாரெல்லாம் எந்தெந்த வகையில் நிம்மதியாக இருப்பார்கள்..?
1. ஜனாதிபதி மாளிகையின் புகைப்படக்காரர் 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவார். சாக்பீஸில் தாஜ்மகால் செய்த பத்து வயது சிறுவன் முதல், நாக்கில் அலகு குத்தி லாரியை இழுத்த இளைஞன் வரை, சாதனை என்ற பெயரில் கொத்து, கொத்தாக கிளம்பி வருபவர்களை கலாமுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தார்.
Man, he reaches out to the public. How many presidents have been encouraging to the people of India like him! There s nothing called "Periya Saadhanai", "Chinna Sadhanai" ! He likes to meet people and people love to meet him. Oru vagayana "virumthombal" endru thaan vaithukollungal. yaaraiyum elana paduthuvathillai Dr.Kalam
2. 'ஒட்டன்சத்திரம் மூலம் பௌத்திரம் டாக்டர் கே. என். ராய், ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தார்..' என்பது மாதிரியான கேணத்தனமான பத்திரிகை செய்திகளிலிருந்து மக்களுக்கு விடுதலை
Bathil Melaye irukkuthu my friend
3. பத்து நாளைக்கொரு முறை தேசிய ஜோசியக்காரராக மாறி, ' 2020-ல் இந்தியா வல்லரசாகிவிடும்' என்ற வறட்டு ஜம்ப ஸ்டேட்மெண்ட் கொஞ்சமாவது குறையும்.
Varattu jambam illai. Avar sadhanaiyalar. He has handled many space projects (successful and failure) and is the mastermind behind the pokhran nuclear testing. Avar india 2020 vision solla mudiyathunna, vera evarakkum arugathai ilai!
4. 'ஜனாதிபதிங்குறது எம்மாம்பெரிய வேலை.. அங்கப்போயி வேலையைப் பாருய்யான்னா, சின்னப்புள்ளைகக்கூட வெளாடுறாருப் பாரு..' என்று எங்கள் கிராம பெரியவர் ஒருவர் சொன்னார். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை. ஆனால், ஊடக வெளிச்சத்தில் அவர் குழந்தைகளை கொஞ்சுவது மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் அந்தக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகள் நமக்குத் தெரிவதில்லை.
Dr.Kalam was not just showing off his love for children. He meant it. http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article§id=3&contentid=20070708025227125feada28d
You can see the link for clarifications.
ஜனாதிபதி வருகிறார் என்றால், அந்த விழாவுக்கு வர வேண்டிய பள்ளிக் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் வேலை, அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ஆரம்பித்துவிடுகிறது. அந்தக் குழந்தைகள் யார், அவரது பெற்றோர்கள் யார், விழா நாளன்று எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் என்றெல்லாம் ஏராளமான முன் தயாரிப்புகள் உண்டு. ஜனாதிபதியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை முன் கூட்டியே எழுதி வாங்கி விடுகின்றனர். விழா நடக்கிற தினத்தில் ஜனாதிபதி வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே அரங்கத்தில் அல்லது அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றனர். பல இடங்களில் ஜனாதிபதியை வரவேற்க பள்ளி மாணவிகள் கொளுத்தும் வெயிலில் பல மணி நேரம் கால் கடுக்கக் காத்துக் கிடக்கின்றனர். இதிலிருந்தெல்லாம் இனி அவர்களுக்கு விடுதலை. ( தன் பதவிக்காலத்தில் ஏராளமான குழந்தைகளை சந்தித்த கலாம், இந்த சீரற்ற கல்விமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்ததுதானா.. குறைந்தபட்சம் தான் விரும்பும் வல்லரசை உருவாக்க இந்த கல்விமுறை போதுமானதா என்று ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை..)
President's meeting is a big formality, my friend. I have attended the presidential meeting and waited for two hours in the chamyana and everyone was checked of their belongingd and seated in an order. Yaarum veyilla nikalai. Nirkavum mudiyathu.Generally, meetings are not in open space for security reasons.
You will experience the aura od inspiration when he enters the hall! The wait was worth I said to myself and everything melted like snow when I took the oaths
· I will never indulge in any anti – social activities
· I will work for the benefit of my society imparting my knowledge
· I will never consume alcohol or drugs
· I will never gamble
· I will plant trees to make my society green
· I will educate atleast five illiterate children and create awareness towards education
· I will avoid Brain – Drain as far as I am concerned.
The security is mandatory for a president, my friend. The questions are checked before, but freedom is given to asking their questions.
இனி அப்துல் கலாம் என்ன செய்யலாம்..?
1. 'கனவு காண்பது எப்படி..?' என்றோ, 'கனவுகளும், அதன் பலன்களும்' என்றோ இந்தியாவின் எல்லா மொழிகளிலும் புத்தகம் எழுதலாம். ஒவ்வொரு எலிமண்ட்ரி ஸ்கூலிலும் போய் அதனை விற்பனை செய்யலாம்.
I think you haven't read his books "Agni Siragugal" and "India 2020". Your perspective of him will change when u read them . He doesn't deserve this harsh teasing like this!
2. ஊர், ஊருக்கு கனவு காண்பது எப்படி என்று பயிற்சி பட்டறை நடத்தலாம். அவரே நேரடியாக கனவு கண்டு செய்முறை பயிற்சி அளிக்கலாம்.
Avar seymuraiyai erkanave senju kaamichuttar avaroda ariviyal sadhanaigalala. Ini avar vaazhkai thaan namakku paadamaga eduthukanum.
3. காசியிலோ, கங்கையிலோ குடிசை அமைத்து 'வல்லரசு நமக, வல்லரசு நமக' என்று யாகம் செய்யலாம்.
Avar seytha "agni chiragugal" yaagame podhum. en pondra ilaizhargal vallarasu aakuvom india vai. avarai kindal seyvathu evolavu easy aagivitathu ungalal!
4. தன்னை ஒரு முழுமையான சுயம் சேவக் என அறிவித்துவிட்டு, ராமேஷ்வரம் டூ ராஷ்ட்ரபதி பவன் ரத யாத்திரை போகலாம்.
pala vedikkai manitharai pol avar endru neengal ninaitheergala ?
5. வாஜ்பாயை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று மூட்டு வலிக்கு மருந்து போடலாம்.
illogical idea!
6. ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில், 'அப்துல் கலாம்னா, தொப்பி வச்சுக்கிட்டு தொழுகை பண்ணுவேன்னு நினைச்சியா..? என் பழைய ரெக்கார்ட்ஸையெல்லாம் எடுத்துப் பாரு..' என்று சுஜாதா எழுதும் வசனத்தைப் பேசி ஒரு கெஸ்ட் ரோல் பண்ணலாம். செவ்வாய் கிரகத்தில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை 2020-க்குள் ஒழிப்பது குறித்து அடுத்த படம் எடுக்க ஷங்கரை வற்புறுத்துவதோடு, அதற்கான விஞ்ஞான பூர்வ திரைக்கதையை சுஜாதாவோடு இணைந்து தயாரித்து அரங்கனின் காலடியில் வைத்து சேவிக்கலாம்.
paavam avar!!!!
7. 'குடிமகனாய் இருக்கும் நீங்கள் முதல் குடிமகனாக மாறுவது எப்படி..?' என மணிமேகலை பிரசுரத்தில் புத்தகம் போடலாம்.
He's fully eligible to be the first citizen! He never speculated or craved for becoming the president!
8. குமுதத்தில் எப்படியாவது இடம் பிடித்து, 'கண்ணைத் திற.. கனவு வரட்டும்' என ஆன்மிகம் கலந்த அறிவியல் தொடர் எழுதலாம்.
Why not?
9. 'ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்கும் எனக்கும் பதினாலு தலைமுறை உறவு இருக்கு. அதனால என்னை அங்க அர்ச்சகரா நியமிக்க சிபாரிசு பண்ணனும்' என காஞ்சி 'காம'கோடி சங்கராச்சாரியிடம் அப்ளிகேஷன் கொடுக்கலாம்.
very funny
10. மலைச்சாமி தேர்தல் கமிஷனராக இருந்து பதவிக்காலம் முடிந்ததும் அ.தி.மு.க.வில் சேர்ந்து சேவை செய்ததைப் போல அப்துல் கலாமும், அ.தி.மு.க.வில் சேரலாம். கட்டாயம் அம்மா, ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியாவது தருவார்.
He has no inclination towards politics. funny creativity, but logic missing.
11. சாய்பாபா வாயில் லிங்கம் வருவது எப்படி என்று பாபா வாயில் அணுகுண்டு வைத்து வெடித்து ஆராய்ச்சி செய்யலாம். இந்த ஆபரேஷனுக்கு 'பாபா மரித்தார்' என பெயர் வைக்கலாம்.
He has done that before ! baba atomic research centre il!
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லாததால் யார் யாருக்கெல்லாம் நஷ்டம்..?
1. பத்திரிகை கார்ட்டூனிஸ்டுகளுக்கு ஒரு கோமாளி கேரக்டர் போய்விட்டது.
don't worry! prathibha will replace him !
2.சிறந்த முறையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர், பத்து நிமிடத்தில் நூறு நாடுகளின் தலை நகரங்களை ஒப்புவிக்கும் சிறுமி போன்றவர்களுடன், கூட நின்று புகைப்படம் எடுப்பதற்கு சளைக்காமல் போஸ் கொடுக்கும் ஒரு நபர் இனி கிடைக்க மாட்டார்.
True!!! annaa sittu kuruvi legyam ellam over!
these r my views my friend.. it conflicts with urs almost entirely! cos' am an abdul kalam rasigai
http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article§id=3&contentid=20070708025227125feada28d
( for kalam's care towards children)
Cheers,
Nithya Subramanian
http://nithyasubramanian.blogspot.com
ஒரு மைல்ட் டவுட்: உங்க புரொஃபைல் பார்த்தேன். அது என்ன நித்யா ஐயர்..? ஐயர்ங்குறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா..?
சாதாரண இடது சாரி பிரசுரங்கள், கம்யூனிஸ்ட் புத்தகங்கள் படிப்பவர்கள், சன் டி வி பார்ப்பவர்கள் திண்ணை பேச்சு வீரர்களுடன் சகவாசம் வைப்பவரகளுக்கு, இது போன்ற தாழ்வு மனபான்மை ஏற்படுகிறது..... தமிழனை , தமிழனே காலை வார தோன்றுகிறது....வெற்று கூச்சல் தான் அறிவு ஜீவிதனம், மற்றவர்கள் முட்டாள் கள் என்ற மாயை ஏற்படுகிறது...எனக்கும் அந்த மாயை இருந்தது...
ஒரு நல்லவரை, ஒரு திறமை சாலியை, தமிழன் என்ற ஒரே காரணத்தால், சோனியா கும்பல் ஓரங்கட்டியது... ரப்பர் ஸ்டாம்ப் ஆக இல்லாமல் அவர் எடுத்த சில முடிவுகள் (சோனியா பதவியேற்க முட்டு கட்டை போட்டது, ஒரு மசோதவை கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியது போன்றவை)சோனியாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது.....
ஒரு முஸ்லிம் ஜனாதிபதி ஆக இருந்தால், நாளை இன்னொரு சிறுபான்மை இனத்தவர் (சோனியா) பிரதமர் ஆவதில் சிக்கல் ஏற்படலாம்..
இந்த காரணங்களால் அவர் நிராகரிக்கப்பட்டார்.....இதற்கு வாய் சவடால் இடதுசாரிகள் ஒத்துழைப்பு..இங்குள்ள ஞானி போன்ற அறிவு ஜீவிகள் இதற்கு ஆத்ரவு...
முஸ்லிமாக இருப்பதும், தமிழனாக இருப்பதும் அவ்வளவு பெரிய பாவம்!!!...
விதியே, விதியே தமிழ் சாதியை என் செய்ய நினைத்தாய் என்று புலம்புவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது..தமிழனுக்கு, தமிழன்தான் எதிரி......
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று என் கிராமத்தில் சொல்வார்கள்.அதுதான் நினைவுக்கு வருகிறது.
நம்ம எல்லாம் வளந்தாச்சு, இனி வளையமாட்டோம்.
அவர் விஷயம் தெரிஞ்சு சரியாத்தான் செய்யறாருன்னு நெனைக்கறேன்.
ரப்பர் ஸ்டாம்பா இல்லாம, சில ப்ரிக்ஷன் கொடுத்ததால, வழக்கமான அரசியல் வியாதிகளால் காவு வாங்கப்பட்டார் என்றே தோன்றுகிறது.
ஒரு தவறும் செய்யாமல்,சின்ன சின்ன மாற்றமும், பெரிய பெரிய முன்னுதாரணும் பலருக்கு உருவாக்கியவர்.
பாராட்ட வேணாம், இப்படி நெக்குலடிக்காமயாவது இருக்கலாம் என்பது அடியேனின் கருத்து :(