பிணம் திண்ணும் கோக்..

லக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி,கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும்,வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்துவிட்டது.நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன.வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

கங்கைகொண்டான்- பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன.கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம்.அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது.இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது.இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை.தற்போது பெய்த மழையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கோக்,தனது கழிவு நீரையெல்லாம் அந்த வாய்க்காலில் திறந்துவிட்டுவிட்டது.

வழக்கமாக விவசாயிகள் தங்களின் ஆடுகளை அந்த வாய்க்காலை ஒட்டிய ஏரியாவில்தான் மேய்ப்பார்கள்.அந்த ஆடுகள் வாய்க்கால் தண்ணீரை குடித்துவிட்டன.விளைவு...வரிசையாக ஆடுகள் செத்து மடிந்துவிட்டன.இதுவரைக்கும் செத்திருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும் ஐநூறுக்கும் மேல் இருக்கும்.இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் அதிகமாகியிருக்கும்.ஒவ்வொரு ஆடும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போக கூடியது.அதை நம்பிதான் பிள்ளைகளுக்கு திருமனம்,படிப்பு என்று இவர்களின் மொத்த வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.

செத்துமடிந்த ஆடுகளை ; தங்கள் வாழ்வை இதுவரைக்கும் செழிக்க செய்த ஜீவன்களை அப்படியே வேலியோரங்களில் தூக்கிப்போட்டுவிட்டு நெஞ்சு கணக்க வீடு திரும்பும் அனைத்து விவசாயிகளின் மனதிலும் கங்கு எரிந்துகொண்டிருக்கிறது.''தாயோளி....அந்த கோக்குக்காரன் வந்துதாம்யா எல்லாத்தையும் கொன்னுபுட்டான்..அவன் வந்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகலை..அதுக்குள்ள ஆடுகல்லாம் செத்துப்போச்சு..இன்னும் ரெண்டு வருஷத்துல மனுஷ மக்களையும் சுடுகாட்டுக்கு அனுப்பிட்டுதான் ஓய்வான் போல.." என்று மனம் வெதும்பி புலம்புகின்றனர் அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குள்ளான எளிய மக்கள்.

எப்போதும் எளியவர்களையும்,கிராமங்களையும் கொஞ்சமும் மதிக்காத அரசு அதிகாரிகள் ஆடுகள் இறந்தவுடன் பதறிக்கொண்டு ராஜபதிக்கு ஓடிவந்தார்கள்.வந்து 'இது நீலநாக்கு நோய்.கோக் கழிவிற்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை..' என்று அவர்கள் சொன்னது யாருடைய தூண்டுதலில் என்பதை கிராம மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.

''எல்லாம் காசு பொறுக்கி பயலுவொ...எலும்பு துண்டு கிடைக்குமான்னு அலையுதானுவொ..டாக்டர் பயலுவலாவது நீலநாக்கு நோய்ன்னு சொன்னதோட விட்டான்.இந்த போலீஸ்காரப்பயலுவொ இருக்கானுவொ பாருங்க..ரவை பன்னெண்டு மணிக்கு கதவைத் தட்டி, 'ஆடு செத்ததுக்கு பணம் தர்றோம்'னு சொல்லி,வெத்து பேப்பர்ல கையெழுத்துக் கேக்கான்.யாரும் கையெழுத்துப் போட முடியாதுனு சொன்ன பொறவு ஓடி போயிட்டானுவொ.அவனுவொளை கட்டி வச்சு தோலை உரிச்சிருக்கனும்.இவனுவொ மாதிரி ஆளுக குடுக்குற தைரியத்துலதான அந்த வெளிநாட்டுக்காரன் இங்க வந்து இந்த அட்டுழியம் பண்ணுதான்..?" என்று கொதிப்பில் வெளிவரும் வார்த்தைகள் செயல்களாக மாறுவதற்கு அதிக நாள் பிடிக்காது.

எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க நாய்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு, இங்கிருக்கும் கூட்டிக்கொடுக்கும் பலபேர் பின் புலமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கோக்கின் கழிவு நீர் அண்டாத தூரப்பகுதிகளில் சொகுசாக வாழ்கின்றனர்.இன்று ஆடுகள் பலி பீடத்தில் ஏற்றப்பட்டது போன்று நாளை கோக்கிற்கு அவசர பலியாடுகள் தேவை என்றால்,இந்த கூட்டிக்கொடுக்கும் காவாளிகளை முதல் ஆளாக பலியாக்க கோக் தயங்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு: இந்த கட்டுரை பூங்கா இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

வெங்கட்ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
/***********************************
வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
***********************************/

மக்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும், கோக்கும் - கருணாநிதிய்ம் ஒரே ரகம்.
வெங்கட்ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் எத்தனை பதிவுகள் போட்டாலும், எத்துனை பேர் எடுத்து சொன்னாலும் அரசாங்கமும் சரி, மக்களும் சரி கோக்கை நிராகரிக்கப் போவதில்லை.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்ராமன்.

//இன்னும் எத்தனை பதிவுகள் போட்டாலும், எத்துனை பேர் எடுத்து சொன்னாலும் அரசாங்கமும் சரி, மக்களும் சரி கோக்கை நிராகரிக்கப் போவதில்லை//

அப்படி விட்டுவிட முடியாது வெங்கட்ராமன்.எல்லா சுரண்டலுக்கும் ஒரு முடிவு உண்டு.அதன் ஆரம்பப்புள்ளி, நீங்களாகவோ,நானாகவோ ஏன் இருக்கக் கூடாது..?
வெங்கட்ராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
/******************************
அதன் ஆரம்பப்புள்ளி, நீங்களாகவோ,நானாகவோ ஏன் இருக்கக் கூடாது..?
******************************/

கண்டிப்பாக நம் பங்கிற்கு எதாவது செய்ய வேண்டும், நான் கோக் குடிப்பதை நிறுத்திவிட்டேன.

உங்கள் பதிவிற்கு என் வலைப்பூவில் என்னைக் கவர்ந்த பதிவுகள் இருந்து link கொடுத்துள்ளேன்.

http://rajapattai.blogspot.com
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hi, Good Topic. Well done. Kudos. I hope that ur blog would bring in changes. Keep up the good work. May God Bless.
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் அவர்களே,

உங்களின் இந்த பதிவுகளுக்கு எல்லாம் நாங்கள் கோக்கை புறக்கணிக்க முடியாது. இதை எல்லாம் படித்து உணர்ச்சிவசபடுவதால் என்ன நடக்கப் போகிறது. அனைத்து தொழிற்சாலையுமே நச்சு கழிவைத்தான் வெளியேற்றுகின்றன. இதை கோக் ஆலை செய்தால் மட்டும் அமெரிக்க அடிவருடிகளை திட்ட வேண்டியது. ஏன் உங்களுக்கு அமெரிக்காவின் மீது இந்த கொலை வெறி. உங்களுக்கெல்லாம் இந்தியா முன்னேறினால் எங்காவது எறிகிறதா.

ஏதோ அமெரிக்காவினால் தான் இன்று இந்தியாவில் ஐநூறிர்கும் ஆயிரத்திற்கும் அரசாங்க வேலைக்கு காத்திருந்த நடுத்தர மக்கள் லட்சங்களில் புரள முடிகிறது.

2020 இல் வல்லரசு என்று சும்மா கூறிக்கொண்டு இருந்தால் போதுமா. இந்த மாதிரி கிராமங்களில் ஐந்துக்கும் பத்துக்கும் பஞ்ச பாட்டு பாடுபவர்கள் இருந்தால் எப்படி முன்னேறுவது.

இல்லாதவன் எல்லா காலத்திலயும் செத்துகிட்டுதான் இருப்பான். அவன் வீட்டில் கல்யாணம் நடந்தால் என்ன, கருமாதி நடந்தால் என்ன.
இல்லாதவனுக்கு ஆடு செத்தா என்ன, இல்லை அவனே செத்தாதான் என்ன. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுலையும் விவசாயம், மயிரு மண்ணாங்கட்டியின்னு பேசிக்கிட்டு.........

போய் வேறு வேலையை பாருங்கள்.

வசந்த்

அமெரிக்காவின் ஊடுருவல்கள் மற்றைய நாடுகளுக்குள் இராணுவம், சி.ஐ.ஏ என்று மட்டும் இருப்பதில்லை. அது கோக், மக்டொனால்ட்ஸ், பேகர்கிங், பெப்ஸி, சி.என்.என் என்று எங்கும் நிறைந்துள்ளது.

அமெரிக்கா அப்கானிஸ்தானிலிருந்து தலிபானை விரட்டிவிட்டு கோக்கையும், மக்டொணால்ட்ஸையும் அப்கான் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் சனனாயகத்தைக் கொண்டுவருவதில் இது முக்கிய பங்காகும்.

எங்கள் அரசியல்வாதிகளோ பசிக்குப் பாண் திருடியவருக்கு சிறைத்தண்டனை கொடுத்துவிட்டு அமெரிக்க/ஐரோப்பிய நஞ்சுகளை மேள தாளங்களுடன் வரவேற்கிறார்கள்.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
மிஸ்டர்.வசந்த்,

//ஏதோ அமெரிக்காவினால் தான் இன்று இந்தியாவில் ஐநூறிர்கும் ஆயிரத்திற்கும் அரசாங்க வேலைக்கு காத்திருந்த நடுத்தர மக்கள் லட்சங்களில் புரள முடிகிறது.//

சொல்ல உங்களுக்கே வெட்கமாக இல்லை? அமெரிக்க நிறுவணங்கள் ஒன்றும் சும்மா நமக்கு வேலை தரவில்லை. 100/- ரூ செலவு இங்கே 20/- ரூ ஆவதினால் தாம் வருகின்றன. நமக்கு அந்த 20/- ரூ பெரிய விடயம். நாளைக்கே சீனா 19/- ரூ செலவில் அதே வேலை செய்ய தயாராக இருந்தால், கரிசனம் பாவம் எல்லாம் பார்க்காமல் அங்கே ஓடிவிடும். காரணம் அமெரிக்கர்களுக்கு எல்லாமே பிஸினஸ் தாம்.

இரண்டு நாள் பவர் கட் ஆன அன்று எல்லா ஓட்டல்களும் 1 டாலர் மினரல் வாட்டரை 5 டாலராக அமெரிக்கர்களுக்கே விற்றன. அவர்களால் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியவில்லை. சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்கள், அங்குள்ள ஒரு தென்னிந்திய உணவகம், பணம் வாங்காமல் வந்தவர்களுக்கு உணவிட்டார்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//அமெரிக்க நிறுவணங்கள் ஒன்றும் சும்மா நமக்கு வேலை தரவில்லை. 100/- ரூ செலவு இங்கே 20/- ரூ ஆவதினால் தாம் வருகின்றன. நமக்கு அந்த 20/- ரூ பெரிய விடயம். நாளைக்கே சீனா 19/- ரூ செலவில் அதே வேலை செய்ய தயாராக இருந்தால், கரிசனம் பாவம் எல்லாம் பார்க்காமல் அங்கே ஓடிவிடும். காரணம் அமெரிக்கர்களுக்கு எல்லாமே பிஸினஸ் தாம்.//

மிகச் சரியான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி சீனு..
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
சீனு,

தங்களின் விளக்கத்திற்கு நன்றி.

// சொல்ல உங்களுக்கே வெட்கமாக இல்லை? //

தாங்கள் என் முழு பின்னூட்டத்தையும் மீண்டும் படித்தீர்கள் எனில் அந்த வரிகளின் உள் அர்த்தம் புரியும்.

தங்களின் விளக்கம் புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் நல்லது.

நன்றி
வசந்த்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கட்டுரையை நீங்கள் நேரில் சென்று பார்த்து வந்த பின் எழுதினீர்களா இல்லை எதிலாவது வெளியானதை மீண்டும் இங்கே இட்டுள்ளீர்களா
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்தக் கட்டுரையை நீங்கள் நேரில் சென்று பார்த்து வந்த பின் எழுதினீர்களா இல்லை எதிலாவது வெளியானதை மீண்டும் இங்கே இட்டுள்ளீர்களா..?//

நேரில் சென்று பார்த்து வந்துதான் எழுதினேன்.புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டவைதான்.
அசுரன் இவ்வாறு கூறியுள்ளார்…
///
''எல்லாம் காசு பொறுக்கி பயலுவொ...எலும்பு துண்டு கிடைக்குமான்னு அலையுதானுவொ..டாக்டர் பயலுவலாவது நீலநாக்கு நோய்ன்னு சொன்னதோட விட்டான்.இந்த போலீஸ்காரப்பயலுவொ இருக்கானுவொ பாருங்க..ரவை பன்னெண்டு மணிக்கு கதவைத் தட்டி, 'ஆடு செத்ததுக்கு பணம் தர்றோம்'னு சொல்லி,வெத்து பேப்பர்ல கையெழுத்துக் கேக்கான்.யாரும் கையெழுத்துப் போட முடியாதுனு சொன்ன பொறவு ஓடி போயிட்டானுவொ.அவனுவொளை கட்டி வச்சு தோலை உரிச்சிருக்கனும்.இவனுவொ மாதிரி ஆளுக குடுக்குற தைரியத்துலதான அந்த வெளிநாட்டுக்காரன் இங்க வந்து இந்த அட்டுழியம் பண்ணுதான்..?" என்று கொதிப்பில் வெளிவரும் வார்த்தைகள் செயல்களாக மாறுவதற்கு அதிக நாள் பிடிக்காது.

எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க நாய்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு, இங்கிருக்கும் கூட்டிக்கொடுக்கும் பலபேர் பின் புலமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கோக்கின் கழிவு நீர் அண்டாத தூரப்பகுதிகளில் சொகுசாக வாழ்கின்றனர்.இன்று ஆடுகள் பலி பீடத்தில் ஏற்றப்பட்டது போன்று நாளை கோக்கிற்கு அவசர பலியாடுகள் தேவை என்றால்,இந்த கூட்டிக்கொடுக்கும் காவாளிகளை முதல் ஆளாக பலியாக்க கோக் தயங்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

////

வெகு அருமையான கட்டுரை ஆழியூரான்....

நேரில் சென்று இதை பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்...

கூட்டிக் கொடுக்கும் காவாளிகளை அவர்க்ளின் எஜமானர்கள் பலி கொடுக்கும் முன்பு உழைக்கும் மக்களின் கோபம் பலி கொடுத்துவிடும்....

போலிஸ் நாய்கள் தாம்பிரவருணீ என்று பழ்ந்தமிழ் நூல்களின் அறியப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றை கூட்டிக் கொடுக்க காசு வாங்கிக் கொண்டு வால்போஸ்டர் கிழிப்பது சுவரெழுத்தை அழிப்பது... வால்போஸ்டர் ஒட்டிய்வர்க்ளை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது.. மூழ்கும் நதி திரைப்படத்திற்க்கு தடை செய்வது.. என்று முழுமையாக கொக்கின் கைக்கூலியாகவே வேலை செயதது...

இந்த அடிவருடிகளின் மண்டை உடையும் நாள் வெகு தொலைவில் இல்லை... உழைக்கும் மக்கள் தங்கள் ஒற்றுமையை உணரும் போது... உள்ளுக்குள் ம்ருகி சாகாமால் தங்க்ள் உளக் கொதிப்பின் வெம்மையில் இந்த சமூகத்தின் அனைத்து மாசு மருவுகளையும் சுட்டெறித்து சுத்தம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை...

அசுரன
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அசுரன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கொடுமை........ :(
Bagath இவ்வாறு கூறியுள்ளார்…
i am aasath:

Congratulations to the hearing of DEAFs ...

It is the part of struggle against Imperialism. This impact due to the the hunger of World Capitalism. It neglect the lower class peoples from on the earth.

Fight against this is not unique from other peoples struggle (ie, struggle against Kargil seed company, Special Economic Zone, VAT ... etc)

Inqulab Zhindhbath!

-aasath
இவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//2020 இல் வல்லரசு என்று சும்மா கூறிக்கொண்டு இருந்தால் போதுமா. இந்த மாதிரி கிராமங்களில் ஐந்துக்கும் பத்துக்கும் பஞ்ச பாட்டு பாடுபவர்கள் இருந்தால் எப்படி முன்னேறுவது.//

என்ன வசந்த் ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்படும் மக்களை எப்படித்தான் முன்னேற்றுவது ?

உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

//இல்லாதவனுக்கு ஆடு செத்தா என்ன, இல்லை அவனே செத்தாதான் என்ன. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுலையும் விவசாயம், மயிரு மண்ணாங்கட்டியின்னு பேசிக்கிட்டு.........//

இந்தியா ஒர் விவசாய நாடு. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 80 விழுக்காடு விவசாயிகளே அது 65-70% சதவிகதமாக இப்பொழுது குறைந்துள்ளது.

இந்த பெரும்பான்மை இனத்தை புறக்கனிகச் சொல்கிறிர்களா?
இது
வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
இவன்,

// இந்த பெரும்பான்மை இனத்தை புறக்கனிகச் சொல்கிறிர்களா? //

இந்த பெரும்பான்மையான இனத்தை, அதன் உயிர்நாடியான தொழிலை புறக்கனிப்பதின் கருத்துப் பரவலாக்கத்தின் மீதான கோபம் அது.

இந்தியா விரைவில் வல்லரசு ஆகிவிடும் என்று பீற்றிக்கொண்டு இருக்கும் பத்திரிக்கைகள், மேல்தட்டு சமுதாயம் மற்றும் அரசியல்வாதிகள் மீதான கோபம் இது. சமுதாயம் இது போன்ற அட்டூழியங்களை கண்டும் காணாமல் இருப்பதன் மீதான கோபம் இது.

இந்தியாவை வல்லரசாக்கும் வேலைகள், இது போன்று ஆயிரம் ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த நதியை, அதனை சார்ந்து வாழும் மக்களை அழித்து வருவதை உள்ளர்த்தமாக கூறவே அவ்வாறு எழிதினேன். ஆனால் இது சரியாக புரிந்து கொள்ள முடியாதது போல எழுதி விட்டேன் என நினைக்கிறேன். தெளிவுபடுத்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.

// உங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன். //

அதிக நாள் காக்க வைத்திருந்தால் மன்னிக்கவும் :-)).

நன்றி,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!