வாத்திமார் வரலாறு....

ப ள்ளிக்கொடத்துல படிச்சதை நெனச்சுப் பார்க்குறது எல்லாருக்குமே சொகமான வெசயம்தான். அபிஅப்பா அவரு படிச்ச பழைய பள்ளிக்கொட வாத்திமார்களோட பேர்களையெல்லாம் ஞாபகப்படுத்தி ஒரு பதிவு எழுதியிருக்காரு. அதைப்படிச்சதும் அவுத்துவிட்ட மாடு கணக்கா என் புத்தியும் எங்கூருக்கு ஓடிப்போச்சு. தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை போற வழியில மேலஉளூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்குன எறங்கி மேற்கப் பாத்து மூணு கிலோமீட்டர் நடந்தா ஆழிவாய்க்கால்னு ஒரு ஊரு வரும். அதுதான் எங்க ஊரு. ஊருக்குள்ள உப்புக்கொளத்தான் கரையில தெக்குப்பார்த்தாப்ல இருக்குது எங்க பள்ளிக்கொடம். எட்டாங்கிளாஸ் வரைக்கும் இருக்கு. மொத்தம் மூணு கட்டடம். அதுக்குள்ளாறதான் எட்டு கிளாஸ் பிள்ளைகளும் உக்காந்திக்கணும். ஏ,பி,சி,டி..ன்னு செக்ஷன் பிரிக்கிறது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரு வர்றது.. இந்த சோலியேக் கெடையாது. ஒரு கிளாஸ்தான்..ஒரே வாத்தியாருதான். மொதக்கிளாஸ் படிக்கும்போது ஆரம்பத்துல ஒரு ஆம்பளை வாத்தியார்தான் வந்தாரு. அப்புறமா கொஞ்ச நாள் செண்டு, ஜெயசித்ரா ன்னு ஒரத்தநாட்டுலேர்ந்து ஒரு புது டீச்சர் வந்தாங்க. அவங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். கன்னங்க...