ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.

"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு. ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை. என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை. ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய...