இந்து கடவுளுக்கு மட்டு்ம் சலுகை ஏன்..?
இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்கிறோம்.ஆனால் சில எதிர்பாராத தருணங்களில்தான் பல விஷயங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன. சமீபத்தில் வேலை நிமிர்த்தமாய் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றிவர வேண்டிய அவசியம ஏற்பட்டது.சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போனேன்.(சத்தியமா வேலை விஷயமாதாங்க..)அப்போது நான் கவனித்த ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களின் முகப்பில் ஒரு இந்து கோயில் இருக்கிறது.ஒரு காவல் நிலையத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கலாம்.(பார்க்கிறார்கள்).அப்படியிருக்கும்போது ஒரு தனிப்பட்ட மதத்துக்கு மட்டும் வழிபாட்டுத் தளம் அமைத்திருப்பது ஏன்..?இறைபக்தி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..பிள்ளையாரை வழிபடும் நீங்கள் கோயில் கட்டிக்கொண்டால் கர்த்தரை வழிபடுவோரும்,அல்லாவை தொழுவோரும் எங்கே போவார்கள்..? எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..? அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடுப் பார்த்தால்தான் போலீஸ் ஸ்டேஷன்கள் எ...