இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமச்சீர் கல்வி - யார் குற்றவாளி?

சமச்சீர் கல்வி முடக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் சமமான கல்விமுறை என்பதை ஜெயலலிதா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அனைவருக்கும் பொதுவான அரசு என காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் ‘பாடத்திட்டம் சரியில்லை, குறைகள் இருக்கின்றன, மேம்படுத்துகிறோம்’ என சமச்சீர் கல்வி குறித்து பலவிதமான சால்சாப்புகளை ஜெயலலிதா சொல்கிறார். ஆனால் தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு இத்தகைய நிர்பந்தம் இல்லை என்பதால், ‘அதெப்படிங்க எல்லாருக்கும் ஒரேவிதமான கல்விங்குறது சரியா இருக்க முடியும்? அப்புறம் தகுதி, திறமை என்னாகுறது?’ என்று வெளிப்படையாகப் பேசுகின்றனர். இராம.கோபாலன் மிக திமிர்த்தனமாக ‘சமச்சீர் கல்வி என்பது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்துவிடும்’ என்கிறார். நடப்பில் இருக்கும் கல்விமுறைதான் குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது என்பது இதன் முரண் யதார்த்தம். பா.ராகவன் போன்ற அறிவாளி அம்பிகளோ, சமச்சீர் கல்விக்கென தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி இதை நிராகரிக்கிறார்கள். இதில் அச்சம் தரக்கூடிய அம்சம், ஓர் அரசு அனைவருக்கும் சமமான கல்வி என்பதை மறுக

ரஜினி… ஒரு நடிகனின் கதை!

ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ரஜினியைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் விதவிதமாக வெளியானபடியே இருக்கின்றன. ‘இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன’ கல்லீரல் செயல் இழந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து’ என பலவாறு சொல்லப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை ஏதோ ஒரு விதத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ரஜினியின் உடல்நிலை எப்போது சீராகும், அவர் மீண்டு வந்து நடிப்பாரா, முடியுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அலசப்படுகின்றன. வேறு சிலரோ, ரஜினியுடனான தங்களது உறவு குறித்து அசைபோடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினி என்ற மனிதரை நாம் சற்று விலகி நின்று பார்ப்போம். ரஜினியை சுற்றி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரமாண்ட பிம்பம் எந்த அளவுக்கு உண்மையானது? ரஜினிக்கு ஒன்று என்றால் மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதைப் போலவும் உருவாக்கப்பட்டிருக்கும் தோற்றம் பல பத்தாண்டுகளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிய மிகை பிம்பம். யதார்த்தத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. சினிமா மட்டுமே மிகப்பெரிய ப

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்! மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை! பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட. ’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறா

அன்னா ஹசாரே: இந்தியாவின் டிராஃபிக் ராமசாமி

எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத குறையை கடந்த ஒரு மாத காலமாக தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். திருச்சியில் 5 கோடி, திண்டிவனத்தில் 2 ஒரு கோடி, கூடுவாஞ்சேரியில் 1 கோடி என தினசரி தலைப்பு செய்திகளை தேர்தல் ஆணையமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கறார்த்தனத்துக்கு மிடிள்கிளாஸ் மக்களிடையேயும், ஊடகங்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பு. ’இப்படில்லாம் பண்ணாதான் சார் இவனுங்க அடங்குவானுங்க’ என மத்திய வர்க்க மனநிலைக்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வடிகாலாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆக்‌ஷன் காட்சிகளால் விளைந்த பலன் என்ன? ஒரு செயல் அதன் பரபரப்புகளுக்காக அல்லாமல் நோக்கம் மற்றும் விளைவுகளைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். ’தேர்தலில் புழங்கும் பணத்தைக் கட்டுப்படுத்துவது. இதன்மூலம் ஊழலை ஒழித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது’. அதாவது எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பது ஆணையத்தின் நோக்கம். அதனால்தான் பண பரிவர்தனையை மாய்ந்து, மாய்ந்து கட்டுப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சட்டப்பூர்வமற்ற வகையில் பணம் பரிமாறப்படுவதை தேர்தல் ஆணை