ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.


"வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம்தான்.சந்தேகமிருந்தால் தோற்றவனைக் கேட்டுப்பாருங்கள்.." என்றார் வில்சன் பிரபு.

ஜேட் கூடியின் முகவரி தெரிந்தால் ஷில்பா ஷெட்டியின் அதிர்ஷ்டம்பற்றி கேட்டுவிடலாம்.கேட்டால் அந்த அம்மணி என்ன சொல்லும்..? ''அவ என்னைவிட பெரிய நாடகக்காரி.." என்றா..? சொன்னால் தப்பில்லை.அதுதானே உண்மை.

என்னவோ இந்த நாட்டின் ஒட்டுமொத்த மானம் மரியாதையும் ஷில்பா ஷெட்டியின் உள்ளாடைக்குள்தான் இத்தனை நாட்களாய் ஒழித்து வைக்கப்பட்டிருதது மாதிரி மீடியாக்கள் இந்த செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் எரிச்சலாய் இருக்கிறது. 'ஷில்பா அபார வெற்றி...இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினார்..' என்று தலைப்பு வெளியிடுகிறது ஒரு பத்திரிகை.இன்னொன்று, 'வென்றார் ஷில்பா..தோற்றது இனவெறி..' என்று ஷில்பாவை கொண்டாடுகிறது.அவர் இந்தியாவுக்கு வந்து சேரும்போது, 'நிறவெறியை வென்றெடுத்த நாயகியே...வருக..வருக..' என்று கட் அவுட் வைத்தாலும் வியப்பு தேவையில்லை.

ஷில்பாவை அப்படியே நிறுத்திவிட்டு இதைக் கொஞ்சம் பாருங்கள்.விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே இருக்கிறது விஜய கரிசல்குளம்.இந்த ஊரைச் சேர்ந்த பொறியாளர் கணேசன் ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார்.அஸ்ஸாமில் பணியிலிருந்த இவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.இதுவரைக்கும் எந்த விதமான தகவலும் இல்லாமல் பரிதவித்துக் கிடக்கிறது அந்த குடும்பம்.கணேசனின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் தந்தையை உயிருடன் பார்க்க முடியுமா..? என்று பரிதவித்துக் கிடக்கின்றன.ஆனால் இதுவரைக்கும் அரசுத்தரப்பில் கணேசனை மீட்பதற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.இதற்காக மத்திய அமைச்சர்களோ,அரசியல் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை.

இந்த தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கணேசன்,தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்.ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இந்த தேசத்திற்கு அவமானமில்லையா...?இதைப்பற்றி ஏன் யாரும் வாய்திறக்கவில்லை..?

ண்ணை பிசைந்து கல்லாக்கி,அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் ஏழ்மைத் தகப்பனின் மகள், புதுக்கோட்டை சாந்தி ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றபோது, 'அவர் பெண்ணே இல்லை..' என்று அவமானப்படுத்தப்பட்டார்.தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் மிகுந்த உற்சாகத்துடன், 'சாந்தி பெண்ணா...?ஆணா..?' என்று கவர்ஸ்டோரி வெளியிட்டு, போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டி மகிழ்ந்தன.அப்படி சாந்தியை அவமானப்படுத்திய அதே பத்திரிக்கைகள், இன்று ஷில்பாவின் மூலமாக தேசத்தின் மானம் காப்பாற்றப்பட்டிருப்பதாக கொண்டாடுகின்றன.(நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்..).சாந்திக்கு எழுந்த ஆதரவு குரல்களை விட இப்போது ஷில்பாவுக்கு எழும் ஆதரவு பன்மடங்காக இருக்கிறது.இதன் அரசியல் என்ன..?

ஒரு நடிகையை மற்றொரு நடிகை, 'கறுப்புத்தோலுக்காரி' என்று திட்டியதற்காக, மானம் மரியாதையெல்லாம் போய்விட்டதாகவும், 'கறுப்புத்தோலுக்காரி' வெற்றிபெற்றவுடன் இப்போது இழந்த மானமும்,மரியாதையும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் சொல்பவர்களே..ஷில்பாவுக்கு ஏற்பட்ட நிறவெறி அவமானம் கண்டு பொங்குபவர்களே....உள்ளூரில் நடக்கும் ஜாதிவெறி அக்கிரமம் குறித்து இதுவரைக்கும் நீங்கள் வாய் திறந்ததுண்டா..?சாதியென்னும் பெயரால் செயலாலும்,வார்த்தையாலும் தினந்தோறும் பலரை அவமானப்படுத்துகிறீர்களே...அதற்காக வருந்தியதுண்டா...?குறைந்தப்பட்சம் அவற்றைப்பற்றி யோசிக்கவாவது செய்திருக்கிறீர்களா..?உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?

உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை.

தொடர்புடைய இடுகை: tamilnadutalk

கருத்துகள்

மலைநாடான் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்!

இந்த நிகழ்ச்சியே ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நாடகம் என்பது பலரது அபிப்பிராயம். எனக்கென்னவோ பல இந்தியர்களை குறிவைத்து நிகழ்ச்சியாளர்களும், ஹொலிவூட்டைக் குறிவைத்து ஷில்பாவும் போட்ட திட்டம், வெற்றிபெற்றுள்ளது போலவே தெரிகிறது.
நாமக்கல் சிபி இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒரு நடிகையை மற்றொரு நடிகை, 'கறுப்புத்தோலுக்காரி' என்று திட்டியதற்காக, மானம் மரியாதையெல்லாம் போய்விட்டதாகவும், 'கறுப்புத்தோலுக்காரி' வெற்றிபெற்றவுடன் இப்போது இழந்த மானமும்,மரியாதையும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் சொல்பவர்களே..ஷில்பாவுக்கு ஏற்பட்ட நிறவெறி அவமானம் கண்டு பொங்குபவர்களே....உள்ளூரில் நடக்கும் ஜாதிவெறி அக்கிரமம் குறித்து இதுவரைக்கும் நீங்கள் வாய் திறந்ததுண்டா..?சாதியென்னும் பெயரால் செயலாலும்,வார்த்தையாலும் தினந்தோறும் பலரை அவமானப்படுத்துகிறீர்களே...அதற்காக வருந்தியதுண்டா...?குறைந்தப்பட்சம் அவற்றைப்பற்றி யோசிக்கவாவது செய்திருக்கிறீர்களா..?உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?
//

சரியான சாட்டையடிக் கேள்வி ஆழியூரான்!
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த நிகழ்ச்சியே ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நாடகம் என்பது பலரது அபிப்பிராயம்..//

என் அபிப்பிராயமும் இதுதான்.

//எனக்கென்னவோ பல இந்தியர்களை குறிவைத்து நிகழ்ச்சியாளர்களும், ஹொலிவூட்டைக் குறிவைத்து ஷில்பாவும் போட்ட திட்டம், வெற்றிபெற்றுள்ளது போலவே தெரிகிறது..//

ஆனால் இந்த விஷயத்தை தேசத்தின் மானத்துடன் தொடர்புபடுத்தி மக்களை மடையர்களாக்குறார்களே...மீடியாக்களில் இந்த செய்திகளை தொடர்ந்து படிக்கும் சாதாரண மனிதன், 'நம்ம ஊரு புள்ள.வெளியூர்க்காரன் அவமானப்படுத்தியிருக்கான்.சும்மாவா விடமுடியும்..?' என்றுதானே யோசிப்பான்...?

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மலைநாடன்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
நீங்கள் கேட்பதிலே பெரும்பான்மையானவற்றிலே மிக நியாயமிருக்கின்றது. அதேநேரத்திலே, ஷில்பா ஷெட்டிக்கு நிகழ்ந்ததும் நிறப்பார்வை வகைப்பட்டதே என்பதும் உண்மை. இதே "கறுப்புநிற" ஷில்பா ஷெட்டியின் நிறத்துக்காக, "மகாகறுப்பு" தென்னிந்திய நடிகைகளைவிட்டுவிட்டு நாயகியாக்கினால், பார்க்க விருப்பப்படும் அளவீட்டிலே வேண்டுமானால், நிறம் குறித்த வாதம் இன்னொரு பரிமாணம் பெறலாம். பிரித்தானியாவிலே இந்தியர்கள் பார்க்கப்படுவதும் அதே இந்தியர்கள் இந்தியாவிலே மற்ற இந்தியரைப் பார்ப்பதும் ஒரே மாதிரியாகவிருப்பினுங்கூட, இப்படியானவர்களுக்கு அப்படியான நிலைதான் சரியென விட்டுவிடமுடியாது. இரண்டு பிழைகள் கூட்டப்படும்போது ஒரு சரியைச் செய்யாதென்றே படுகிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நாமக்கல் சிபி...வருகைக்கு நன்றி...இந்த விஷயத்தில் உங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்களேன்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//பிரித்தானியாவிலே இந்தியர்கள் பார்க்கப்படுவதும் அதே இந்தியர்கள் இந்தியாவிலே மற்ற இந்தியரைப் பார்ப்பதும் ஒரே மாதிரியாகவிருப்பினுங்கூட, இப்படியானவர்களுக்கு அப்படியான நிலைதான் சரியென விட்டுவிடமுடியாது. இரண்டு பிழைகள் கூட்டப்படும்போது ஒரு சரியைச் செய்யாதென்றே படுகிறது.//

நண்பரே....உங்களின் இந்த கருத்தை புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் உள்ளது.மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.கொஞ்சம் விளக்கிசொன்னால் நன்றாக இருக்கும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஏனப்பு அவமானம், பார்க்க நல்லாத்தானே இருக்கிறா ஜாதிக்குதிரைமாதிரி.
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பா,

ஷில்பா ஜெயித்து கல்லா கட்டிக்கிற நம்ம மானம்தான் போச்சு. அதுவும் சிபி டேக் எடுத்த உங்களின் அக்கருத்துகள் அருமை.

(P.S:-இப்பதிவே ஃபயர்பாக்ஸில் படிக்கமுடிய வில்லை.

text align மாற்றம் செய்து பாருங்களேன்.)
aathirai இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்.
//
:)

:)

இதையே தானுங்க நானும் கேட்டேன்.

விளம்பரத்துக்காக நாடகம் போடுகிறார்கள்.
இதுதான் நாட்டின் முக்கியமான பிரச்சினை போல எழுதுகிறார்கள்.
வெள்ளைக்காரனாவது நிறவெறியை எதிர்த்து ஓட்டு போடுறான்.
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
நச்சுன்னு நெற்றியில் அறைகிற பதிவு ஆழியூரான்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
/சிபி டேக் எடுத்த உங்களின் அக்கருத்துகள் அருமை.//
நன்றி..

//இப்பதிவை ஃபயர்பாக்ஸில் படிக்கமுடிய வில்லை.
text align மாற்றம் செய்து பாருங்களேன்//

நீங்கள் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் கூட எனக்கு விளங்கவில்லை.டெக்னிக்கலாக நான் ஜீரோ நண்பா...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அதிரை,திரு...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்லவேளை ஷில்பா ஜெயித்தார்.இல்லையென்றால் மானமில்லாத தேசத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கும்..).//
கரெக்டு...

//இந்த நிகழ்ச்சியே ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நாடகம் என்பது பலரது அபிப்பிராயம்//
என் எண்ணமும் அதே தான்..

கணேசனுக்கு என்ன ஆயிற்று என்பதைப் பற்றி ஏன் ஊடகங்கள் பேசவில்லை என்பதும் புரியவில்லை! :(
கார்த்திக் பிரபு இவ்வாறு கூறியுள்ளார்…
varutha pada vendiya vishaym than
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பொன்ஸ்,கார்த்திக் பிரபு...இருவரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..
senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் உங்களின் ஆதங்கம் புரிகிறது. இன்று உலகில் sensational செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது உண்மை. செய்தி நிறுவனங்கள் இதனை செய்வதற்கு காரணம் மக்களின் மனநிலை தான் என்பதும் கசப்பான உண்மைதான். இன்று மக்கள் இது போன்ற விஷயங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஷில்பா ஷெட்டி பற்றிய உங்கள் கருத்துகளோடு நான் ஒத்துப் போகவில்லை.

இது ஒரு நாடகம் என்றே வைத்துக் கொள்ளலாம். ஸ்கிரிப்ட் எழுதி நடத்தப்பட்டது என்றே வைத்துக் கொள்ளலாம்.

அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்ய அந்த சேனலுக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்? தன் நாட்டைச் சேராதவர் என்ற ஒரே காரணத்திற்காக நாய் என்றும், இந்திய பாகிஸ்தானியரை கேவலமாக முறையில் விளிக்கும் வார்த்தைகளை(இங்கிலாந்தில் இது போன்ற வார்த்தைகளைச் சொல்லி இந்தியர்களை அவமானப் படுத்துவது உண்டு.) பல பேர் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி அவமானப்படுத்தும் செயல் மிக மிக மோசமான ஒரு செயலாக மட்டும் எனக்குத் தெரியவில்லை அந்த நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இது ஒரு நாடகம் என்றால் அந்த செயல் இன்னும் மோசமானதாகவே எனக்குத் தெரிகிறது.

இதனைப் பற்றி House of commonல் பேச வேண்டிய அவசியம் என்ன? அந்த நிகழ்ச்சி மூலமாக கிடைத்த லாபத்தை அப்படியே charityக்கு அந்த சேனல் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? அந்த நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டிய அவசியமென்ன?

நாம் இதில் இருக்கும் ஒரு பெரிய பயங்கரத்தை காண மறுக்கிறோம். இன வெறிக் கொடுமையால் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரில் இருந்து மனிதர்கள் எதையும் கற்கவில்லை என்றும் இன்றும் நம்மிடையே இன வெறி என்பது புரையோடித்தான் கிடக்கிறது என்பதையும், இங்கிலாந்து செல்லும் ஆசியர்கள் இது போன்ற இன வெறி மக்களை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் இந்த நிகழ்வு எனக்கு தெரிகிறது.

மேலும் இங்கிலாந்தில் இருக்கும் இன வெறி உணர்வை வெளிச்சம் போட்டு இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் என்று இதனை நான் பார்க்கிறேன்.

இது எந்த விதத்தில் இருந்து பார்த்தாலும் இந்த உலகில் இருக்கும் ஒரு அபாயகரமான ஒரு நிகழ்வை நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் வகையில் இருக்கிறது.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?//

ஸோ, அதுக்காக இதை கேட்கக் கூடாது என்கிறீர்களா, ஆழியூரான்? :)

//வெள்ளைக்காரனாவது நிறவெறியை எதிர்த்து ஓட்டு போடுறான்.//
LOL...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//நாம் இதில் இருக்கும் ஒரு பெரிய பயங்கரத்தை காண மறுக்கிறோம். இன வெறிக் கொடுமையால் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போரில் இருந்து மனிதர்கள் எதையும் கற்கவில்லை என்றும் இன்றும் நம்மிடையே இன வெறி என்பது புரையோடித்தான் கிடக்கிறது என்பதையும், இங்கிலாந்து செல்லும் ஆசியர்கள் இது போன்ற இன வெறி மக்களை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் இந்த நிகழ்வு எனக்கு தெரிகிறது.//

எனக்கு அப்படி தெரியவில்லை. நிறவெறியையும் பயன்படுத்தி காசு பார்க்கும் உலக மயமாக்களின் கோர முகம்தான் தெரிகிறது.

தவிரவும்,நான் இங்கு விவாதிப்பது இந்திய மீடியாக்கள் ஷில்பா செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும்,முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வேறு செய்திகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் தன்மை பற்றியும்தான்.ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.ஷில்பா அந்த நிகழ்ச்சியில் ஒரு நடிகையாக சம்பளம் வாங்கிக்கொண்டுதான்.கலந்துகொண்டாரே ஒழிய, நிறவெறியை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கலந்துகொள்ளவில்ல்லை.நாளை அவர் இந்தியா வந்தவுடன்,இந்தியாவில் இன்னும் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை நடப்பது பற்றியும்,கயர்லாஞ்சியில் தலித் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஒரு பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதுப்பற்றியும் பேசப்போவதில்லை.அவருக்கு பணம் கொட்டும் பன்னாட்டு கம்பெனிகளிடம் வேறு சோலி இருக்கிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//உங்கள் கால்களுக்கும் கீழ் லட்சக்கணக்கானவர்களை தினமும் அவமானப்படுத்தி, இந்த தேசத்தின் மானத்தை தினந்தோறும் கேவலப்படுத்தும் உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?//

ஸோ, அதுக்காக இதை கேட்கக் கூடாது என்கிறீர்களா, ஆழியூரான்? :)////

தாராளமாக கேளுங்கள்.நிறவெறியை மட்டுமல்ல....அப்படியே இனவெறி...சாதிவெறிபற்றியும் கேளுங்கள்.என் வார்த்தைகள் சொல்லவரும் அர்த்தமும் இதுதான்.
ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமையான பதிவு...
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
"உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?" என்றால், பேச அருகதை இல்லை. அதனால், பேசாதே என்று நீங்கள் சொல்வதாக தான் நான் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும்.
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
//நீங்கள் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் கூட எனக்கு விளங்கவில்லை.டெக்னிக்கலாக நான் ஜீரோ நண்பா... //

.boxblog {
color: #666666;
text-align: justify;
margin-bottom: 10px;
font-size: 11px;

மேற்கண்ட வரியை உங்கள் டெம்பிளேட்'ல் தேடி கண்டுபிடித்து அதிலே justify எனபதை center என மாற்றம் செய்யுங்கள்,பிரச்சினை சரியாகிவிடும்.

இன்னும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எனக்கு மயில் அனுப்புங்கள்:)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமையான பதிவு...//
நன்றி ரவி..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//"உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?" என்றால், பேச அருகதை இல்லை.. அதனால், பேசாதே என்று நீங்கள் சொல்வதாக தான் நான் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும்.//


சில விஷயங்களை வன்மையான வார்த்தைகளில் சொன்னால்தான் உடனே உணர்ந்துகொள்ள முடியும் என்பதால் அருகதை என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.அந்த வாக்கியத்தில் 'உங்களுக்கு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'நமக்கு' என்ற வார்த்தையை கையாண்டிருந்தால் உங்களின் இந்த கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன்.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
Howz this???

-----------------------------
By the time u guys read this news, the body of Major Manish Pitambare, who
was shot dead at Anantnag, would have been cremated with full military
honors.
On Tuesday, this news swept across all the news channels 'Sanjay Dutt
relieved by court'. 'Sirf Munna not a bhai' '13 saal ka vanvaas khatam'
'although found guilty for possession of armory, Sanjay can breath sigh of
relief as all the TADA charges against him are withdrawn'
Then many personalities like Salman Khan said 'He is a good person. We knew
he will come out clean'. Mr Big B said "Dutt's family and our family have
relations for years he's a good kid. He is like elder brother to Abhishek".
His sister Priya Dutt said "we can sleep well tonight. It 's a great
relief"
In other news, Parliament was mad at Indian team for performing bad; Greg
Chappell said something; Shah Rukh Khan replaces Amitabh in KBC and other
such stuff. But most of the emphasis was given on Sanjay Dutt's "phoenix
like" comeback from the ashes of terrorist charges. Surfing through the
channels, one news on BBC startled me. It read "Hisbul Mujahidin's most
wanted terrorist 'Sohel Faisal' killed in Anantnag, India. Indian Major
leading the operation lost his life in the process. Four others are
injured.

It was past midnight, I started visiting the stupid Indian channels, but
Sanjay Dutt was still ruling. They were telling how Sanjay pleaded to the
court saying 'I'm the sole bread earner for my family', 'I have a daughter
who is studying in US' and so on. Then they showed how Sanjay was not
wearing his lucky blue shirt while he was hearing the verdict and also how
he went to every temple and prayed for the last few months. A suspect in
Mumbai bomb blasts, convicted under armory act...was being transformed into
a hero.





Sure Sanjay Dutt has a daughter; Sure he did not do any terrorist activity.
Possessing an AK47 is considered too elementary in terrorist community
and also one who possesses an AK47 has a right to possess a pistol so that
again is not such a big crime; Sure Sanjay Dutt went to all the temples;
Sure he did a lot of Gandhigiri but then...........



Major Manish H Pitambare got the information from his sources about the
terrorists' whereabouts. Wasting no time he attacked the camp, killed
Hisbul Mujahidin's supremo and in the process lost his life to the bullets
fired from an AK47. He is survived by a wife and daughter (just like Sanjay
Dutt) who's only 18 months old.



Major Manish never said 'I have a daughter' before he took the decision to
attack the terrorists in the darkest of nights. He never thought about
having a family and he being the bread earner. No news channel covered this
since they were too busy hyping a former drug addict, a suspect who's
linked to bomb blasts which killed hundreds. Their aim was to show how he
defied the TADA charges and they were so successful that his conviction in
possession of armory had no meaning. They also concluded that his parents
in heaven must be happy and proud of him.



Parents of Major Manish are still living and they have to live rest of
their lives without their beloved son. His daughter won't ever see her
daddy again. Finally Major Manish, to my generation is a greater hero,
someone who laid his life in the name of this great nation.





So guys, please forward this message around so that the media knows which
news to give importance, as it is a shame for us since this Army Major's
death news was given by a foreign TV channel!!!
கௌசி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு நடிகையின் நாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஒரு இராணுவ வீரனுக்கு கிடைக்குமா?அரிதாரமும்,ஊடகமும் ,அரசியலுடன் கை கோர்த்துக் கொண்டு கூத்தாடும் நாட்டில் அல்லவா இருக்கிறோம்.
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்க எல்லாம் ஏந்தான் இவ்வளவு பொறாமையா இருக்கீங்க தெரியல!!!

எப்படியோ இந்தியாவுக்கு அந்நிய செலாவணி உள்ள வரப்போவுது.
கொஞ்சம் சந்தோஷமா இருங்க.

தமிநாட்டுல போனதைக்கும் முந்தின பிக் பிரதர் (தேர்தல்) ஷோவுல கூடதான் ஒரு சினிமாக்காரி கெலிச்சுது.அதுக்கு இன்னா சொல்லுவீங்க?
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
இந்தியா ஷில்பாவுக்கு காட்டும அக்கரை சாந்திக்கும், ராணுவ வீரருக்கும் காட்டாதது முக்கியமான பொறுப்பு ஊடகங்கள்தான்.

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் ஷில்பா அவமான பிரச்சினையை அலசும் செய்தியில் பாகிஸ்தானை கூட இணைத்து எழுதியிருந்தார்கள். அதாவது இது இலண்டன் வாழ் இந்தியர்களுக்கு பாகிஸ்தானிய மக்களுக்கு முன் ஒரு கௌரவ பிரச்சினையாம்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் ஷில்பா அவமான பிரச்சினையை அலசும் செய்தியில் பாகிஸ்தானை கூட இணைத்து எழுதியிருந்தார்கள். அதாவது இது இலண்டன் வாழ் இந்தியர்களுக்கு பாகிஸ்தானிய மக்களுக்கு முன் ஒரு கௌரவ பிரச்சினையாம்.//

பிரச்னையின் உண்மையை அறியவிடாமல் மக்களை திசைதிருப்பும் பணியை உள்ளூர் பத்திரிகைகள் முதல் சர்வதேச பத்திரிகைகள் வரை அனைத்து ஊடகங்களும் செம்மையாக செய்கின்றன என்பது உங்கள் வார்த்தைகளின் மூலம் தெரிகிறது.

ஷில்பா விஷயத்தை ஒரு பிரதியாகக்கொண்டு நாம் விவாதிக்க வேண்டியது எதுபற்றி என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மாசிலா,கௌசி...தங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி...
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
முந்திகிட்டியே தம்பி..,

போட்டுத்தாக்கு... தேசத்தின் காவலர்கள் ஆட்டோ அனுப்பீடப்போறாய்ங்க!!

;-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
There is no need to rubbish shilpa for anything. One should blame our community/media for giving such importance to the news.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்லுங்க ஆழி !
லொடுக்கு இவ்வாறு கூறியுள்ளார்…
இது செம்மையாக நடத்தி வெற்றி பெற்ற நாடகம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

ஊடகங்கள் பணத்திற்காக மலமும் திண்ணும் என்பதிலும் எனக்கு உடன்பாடுண்டு.

எத்தனையோ அத்தியாவசிய செய்திகளை உதாசீனப்படுத்தி வரும் ஊடகங்களை நார் நாராய் கிழிக்க வேண்டும் என்ற உங்கள் வெறியிலும் எனக்கு உடன்பாடு தான்.

நண்பரே தொடருங்கள்.
இராம்/Raam இவ்வாறு கூறியுள்ளார்…
//சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்லுங்க ஆழி ! //

:))))))))))))

அது செட்டியில்லை ஷெட்டி
A Simple Man இவ்வாறு கூறியுள்ளார்…
'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார்
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார் //

நானும் செய்திகள் பார்த்தேன்.தகவலுக்கு நன்றி அபுல்..
கொழுவி இவ்வாறு கூறியுள்ளார்…
பெயரிலி என்ன சொல்கிறார் என்றால்,
இங்கிலாந்தில் கொஞ்சம் கறுப்பான வட இந்தியர்களைக் கீழ்த்தரமாய்ப் பார்த்ததுபோலவே வட இந்தியர்கள் தம்மை விட சற்றுக் கறுப்பான தென்னிந்தியரைக் கீழ்த்தரமாகப் பார்க்கிறார்கள். வெள்ளையர்கள் ஷில்பாவுக்குச் செய்ததை, ஷில்பாவின் சமூகம் தென்னிந்தியர்களுக்குச் செய்கிறது. அதேகாரணத்தால் ஷில்பாவுக்கு நடந்தது சரியென்று வாதிடுவது தவறு. தவறு செய்பவருக்கு அதே தவறு வேறொருவரால் இளைக்கப்படும்போது அது சரியென்று வாதிட முடியாதென்பதே அப்பின்னூட்டத்தின் கருத்து. இரு தவறுகள் சேர்ந்து ஒரு சரியாக முடியாதென்பது அதே.

சரிதானா பெயரிலி?
உம்மட தமிழுக்கு வந்த சோதனையைப் பாரும்.

;-)
Gnaniyar @ நிலவு நண்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

பலபேர் தொட்டு நடிக்கின்ற ஒரு நடிகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. இந்தியா வல்லரசு ஆவதற்கு இதுபோன்ற கூத்தாடிகளின் மேகாகங்களும் ஒளியவேண்டும்.
-/பெயரிலி. இவ்வாறு கூறியுள்ளார்…
கிட்டத்தட்ட எல்லாம் சரிதான் கொழுவி, ஒன்றைத் தவிர; ஆனால், இந்தியாவிலே வட இந்தியர் தென்னிந்தியரைப் பார்ப்பதாகச் சொல்லவில்லை. பொதுவிலே, பிறநாடுகளிலே வதியும் இந்தியர்களிலே பலரும் நிறம், சாதி அடிப்படையிலே மேம்பட்டதாகக் கருதிக்கொள்ளுகின்றவர்களும் மற்றையவர்களினைக் கீழ்நோக்கிப் பார்க்கின்றனர் என்பதாகச் சொன்னேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
German Newspaper say " this is a
cheapest Tricks"
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.//
நன்றி நிலவு நண்பன்.

//பலபேர் தொட்டு நடிக்கின்ற ஒரு நடிகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.//

உங்களின் இந்த கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை.ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் அவர் எத்தனை பேரால் தொடப்படுகிறார் என்ற எண்ணிக்கை அல்ல.நடிப்பு என்பது ஒரு தொழில்.அதில் தொடாமல் எப்படி நடிப்பது..?அது என்ன பல பேர் தொட்டு நடிக்கும் ஒரு 'நடிகை'..?ஒரு நடிகன் தன்னை தவிர யாரையும் தொடுவதில்லையா என்ன...?மிக மேலெழுந்த மன நிலையிலான பொதுபுத்தியின் வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை ரசிகவ்.
அதேபோல உங்களின்,

//இந்தியா வல்லரசு ஆவதற்கு இதுபோன்ற கூத்தாடிகளின் மேகாகங்களும் ஒளியவேண்டும்.//

கருத்தும் மேம்போக்கானதே.உங்களை போலவே இங்கு பலருக்கு 'வல்லரசு' மயக்கம் இருக்கிறது.உங்களுக்கான பதிலாக, 'இதுவரைக்கும் ஆயுதம் வாங்குன காசுக்கு அரிசி வாங்கியிருந்தா உலகத்துல பஞ்சமே இருந்திருக்காதே..' என்ற தம்பி பட வசனத்தையே இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.இதுபற்றிய தனிப்பதிவொன்றை விரைவில் இடுவேன்.
✪சிந்தாநதி இவ்வாறு கூறியுள்ளார்…
//வெள்ளையர்கள் ஷில்பாவுக்குச் செய்ததை, ஷில்பாவின் சமூகம் தென்னிந்தியர்களுக்குச் செய்கிறது.//

ஓ ஹிந்தி நடிகை என்பதால் அப்படி சொல்கிறீர்களோ?
சில்பா சென்னையில் பிறந்த கர்நாடகப் பெண் என்பது ஊடகச் செய்தி...;))
திங்கள் சத்யா இவ்வாறு கூறியுள்ளார்…
நடைவண்டிக்கு மறு மொழிவதென்றால் தனியே ஏதாவது பட்டப்படிப்பு படித்தாக வேண்டும்.ஏனென்றால் நடைவண்டி சொல்வதைப் போல் ''உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை''என்று தான் சொல்ல நினைத்தேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்