20/8/06

இந்து கடவுளுக்கு மட்டு்ம் சலுகை ஏன்..?

இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்று பீற்றிக் கொள்கிறோம்.ஆனால் சில எதிர்பாராத தருணங்களில்தான் பல விஷயங்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.

சமீபத்தில் வேலை நிமிர்த்தமாய் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் சுற்றிவர வேண்டிய அவசியம ஏற்பட்டது.சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போனேன்.(சத்தியமா வேலை விஷயமாதாங்க..)அப்போது நான் கவனித்த ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களின் முகப்பில் ஒரு இந்து கோயில் இருக்கிறது.ஒரு காவல் நிலையத்தில் பல மதங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கலாம்.(பார்க்கிறார்கள்).அப்படியிருக்கும்போது ஒரு தனிப்பட்ட மதத்துக்கு மட்டும் வழிபாட்டுத் தளம் அமைத்திருப்பது ஏன்..?இறைபக்தி என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..பிள்ளையாரை வழிபடும் நீங்கள் கோயில் கட்டிக்கொண்டால் கர்த்தரை வழிபடுவோரும்,அல்லாவை தொழுவோரும் எங்கே போவார்கள்..?

எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..?
அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடுப் பார்த்தால்தான் போலீஸ் ஸ்டேஷன்கள் என்ன..பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இப்படி ஏதோவொரு இந்து கோயில் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அரசாங்கம் கட்டிக்கொடுப்பதில்லை.அதிக பக்திகொண்ட பணியாளர்கள் யாராவது தங்கள் சொந்த செலவில் கட்டிக்கொள்கிறார்கள்.இதேபோல வசதிபடைத்த மற்ற சமயங்களை சேர்ந்தவர்களும் தங்களது செலவில் தத்தமது வழிபாட்டுத் தளங்களைக் கட்டிக்கொள்ள முயன்றால் நிலைமை என்னவாகும்..?

அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல...பல அடு்க்குமாடி குடியிருப்புகளிலும் இதே நிலைமைதான்.இதைப்பற்றி நண்பரொருனிரிடம் பேசிக்கொண்டிருந்த போது,'இது முன்னாடியே யோசிச்ச பிரச்னைதான்..சொன்னா நம்மளை இந்து மத விரோதின்னுவான். இல்லேன்னா அல் குவைதா ஆளுன்னுவான்(ஆத்தாடி..).விடுடா பங்காளி'என்றான்.

எனக்கென்னமோ அத்தனை இலகுவாக இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ள மனமில்லை.மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வாழ்வதுதான் உண்மையான வாழ்வென்று நம்புகிறேன்.உங்கள் கருத்தென்ன நண்பர்களே......

41 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இப்டிலாம் எஸகுபிஸகா கேள்வி கேட்டீங்கன்னா ஒங்களுக்கு திம்மின்னு ஸிம்பிளா ஒரு பட்டம் கொடுக்க ஒரு எலி ஸிபாரிஷ் ஸெய்யும்..

புரியலன்னா அப்புறமா தெளிவா ஸொல்றேன்..

Mouls சொன்னது…

romba nalla irukkunga aazi, but the majority gets the right to do.

பெயரில்லா சொன்னது…

வன்னியில் இந்துக்கள் இறந்தால் கலைஞர் சட்டசபையில் கண்டனம் செய்கிறார்.
மூதூரில் முஸ்லீம்கள் இறந்தால், கண்டுகொள்வதில்லை அல்லவா?

அது போலத்தான்

ஆழியூரான். சொன்னது…

திம்மி..எலி.. என்ன சொல்ல வர்றீங்க..
ஒண்ணும் வெளங்கலையே அனானி..கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லக்கூடாதா..

இறை நேசன் சொன்னது…

நடைவண்டிகளில் எப்பய்யா பெட்ரோல் போட ஆரம்பிச்சீங்க. "பெட்ரோல் டாலருக்கு" விலை போய் விட்டீர்களே.

முதலில் தேசத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்கு அடிவருடும் தேசவிரோதியாக இந்தியாவில் இருக்க உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

"தீவிரவாதத்துக்கு" துணைபோகும் வலைப்பூ முல்லாக்களுக்கு ஜால்ரா அடிக்கும் திம்மியாக மானம் சூடி சுரணை இல்லாமல் வாழ்வதை விட சாவது மேல்.

காவல்துறையையும் இந்திய அரசாங்கத்தையும் அவமதிக்கும் விதமாக இப்பதிவினை எழுதியதற்கு எத்தனை பிச்சைக் காசுகளை முல்லாக்களிடமிருந்து கூலியாக பெற்றீர்கள்.


தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் இப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே என்னையறியாமல் தூங்கி விட்டேன்.

கனவில் உங்களை "நேசமாக" யாரோ வைதுக் கொண்டிருந்தது தெரிந்தது. கேட்பதற்கு சுவாரசியமாக இருந்ததால் அப்படியே எழுதி விட்டேன். :-)

இந்தியா மதச்சார்பற்ற நாடு; இங்கு மதச்சுதந்திரம் உண்டு;

ஆகவே இங்கு யாருக்கு வேண்டுமெனிலும் எங்கே வேண்டுமெனிலும் எப்படி வேண்டுமெனிலும் கோயில்களைக் கட்டிக் கொள்ளலாம்.

நாகை சிவா சொன்னது…

ஆழியுரான், நம்ம க.பி.க வை சேர்ந்தவர் நீங்கள் என்று உரிமை எடுத்து பதில் கூறுகின்றேன்.
முதலில் தலைப்பே தப்பு. இந்து மதத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் சொல்வது சரியாக படவில்லை. நீங்கள் போன இடத்தில் இயேசு பிரானின் படம், மெக்கா படங்களை நீங்கள் எங்கும் பாக்க முடியவில்லை என்று கூறுவதை என்னால் சற்று நம்ப முடியவில்லை. நான் பார்த்த வரை, பல அரசு அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களில் அனைத்து மதத்தவரும் பெரும்பாலும் அவர்கள் நம்பும் கடவுளின் படத்தையோ சின்ன சிலையோ வைத்து இருப்பதை பார்த்து உள்ளேன். இதில் அனைத்து மதமும் அடக்கம். பலரும் அவர்களின் மத சின்னத்தை அணிந்து இருப்பதையும் காணலாம். நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்களில் சின்ன சின்ன பிள்ளையார் கோவில்கள் இருப்பது உண்மை தான். அது போல் ஆயுத பூஜையின் போது பெரும்பாலும் இந்து கடவுள்களின் படங்களை வைத்து தான் படையல் போடுவதையும் பார்த்து உள்ளேன். அந்த விழாவை மத அடிப்படையில் பார்ப்பதை விட நம் வேலைக்கு மரியாதை செய்யும் விழாவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடன் பணிபுரிந்த மற்ற மதத்தினரும் எடுத்துக் கொண்டனர்.
அது மற்றுமன்றி ரமலான் மாதத்தில் முஸ்லிம் நண்பர்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் வழங்கப்படும். அந்த சலுகைகள் என்னவென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. நீங்கள் கூற வரும் விசயங்களை நான் உள்வாங்கி கொண்டேன்.

//எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி//
இந்த விதி இருந்தாலும் கூட, கிறிஸ்துவ சபையில் ஊழியம் பார்க்கும் எத்தனையோ கிறிஸ்தவர்கள் உண்டு. ஜமாத்தில் சேவை செய்யும் இஸ்லாம் நண்பர்களும் உண்டு. கோவில்களில் சேவை செய்யும் இந்து நண்பர்களும் உண்டு, இது போல ஜெயின் உட்பட எல்லா மதத்தினருக்கும் பொருத்தும். அதனால் நண்பரே, இதை தனிப்பட்ட ஒரு மதத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்தி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

//பல அடு்க்குமாடி குடியிருப்புகளிலும் இதே நிலைமைதான்.//
குடியிருப்பு பகுதிகளில் மாதா கோவிலையும் காணலாம் நண்பரே!

//நம்மளை இந்து மத விரோதின்னுவான். இல்லேன்னா அல் குவைதா ஆளுன்னுவான்(ஆத்தாடி..).விடுடா பங்காளி'என்றான்.//
இது எல்லாம் தேவையில்லாத கற்பனை.

பெயரில்லா சொன்னது…

ஹலோ மவுல்ஸ்...மெஜாரிட்டி மக்களுக்கு உரிமையிருப்பதாக சொல்கிறீர்களே... ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மெஜாரிட்டியாக இருந்தாலும்,மைனாரிட்டியாக இருந்தாலும் மற்றவர் உணர்வுகளை மதிப்பவன்தான் மனிதன்.

ஆழியூரான். சொன்னது…

//இங்கு யார் வேண்டுமெனிலும் எங்கே வேண்டுமெனிலும் எப்படி வேண்டுமெனிலும் கோயில்களைக் கட்டிக் கொள்ளலாம்.//


இறைநேசன்....உங்கள் கருத்தில் 'எங்கே வேண்டுமெனிலும்' என்பதை எடுத்துவிட்டால் எனக்கும் கூட இந்த கருத்தில் சம்மதம்தான்...

இறை நேசன் சொன்னது…

//வன்னியில் இந்துக்கள் இறந்தால் கலைஞர் சட்டசபையில் கண்டனம் செய்கிறார்.
மூதூரில் முஸ்லீம்கள் இறந்தால், கண்டுகொள்வதில்லை அல்லவா?//


யாருப்பா அது அனானி? புரியாத மொழியில் எல்லாம் பின்னூட்டம் போடக்கூடாது ஆமா!

மூதூரில் என்ற வாசகத்துக்கும் இறந்தால் என்ற வாசகத்துக்கும் இடையில் என்னய்யா அப்படி எழுதி இருக்கீங்க. அந்த இடத்துல வரும் பொழுது மட்டும் கண்ணு கூசி ஒண்ணும் தெரியமாட்டேங்குதே!

ஆழியூரான். சொன்னது…

நண்பர்களே..தயவுசெய்து ஆரோக்கியமான விவாதமாக இதை இட்டுச்செல்லவும்..எனக்கு ஏற்பட்ட ஒரு கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அவ்வளவுதான்...

பெயரில்லா சொன்னது…

பத்த வச்சுட்டியே பரட்டை...

அப்பாவி தமிழன் சொன்னது…

செல்வன் ஒரு பதிவு போடுவது உறுதி.

நாகை சிவா சொன்னது…

//வன்னியில் இந்துக்கள் இறந்தால் கலைஞர் சட்டசபையில் கண்டனம் செய்கிறார்.
மூதூரில் முஸ்லீம்கள் இறந்தால், கண்டுகொள்வதில்லை அல்லவா?
அது போலத்தான் //
இதுல எங்கய்யா வந்துச்சு, இந்து முஸ்லீம். கலைஞரை இந்து மதத்தின் விரோதி என்று தான் பெரும்பாலனா இந்துக்கள் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள். அவரையும் வம்புக்கு இழுக்குறீங்களேப்பா.....
சட்டசபையில் கண்டனம் செய்தது குழந்தைகள் இறந்த்தை குறித்து தான்.

சதயம் சொன்னது…

நீங்கள் சொல்வதைப் போன்ற காட்சிகள் அரசு அலுவலகங்களில் சகஜமான ஒன்றுதான்....அதே நேரத்தில் சகோதர மதத்தவரின் சின்னங்கள் இருப்பதை நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

சில இடங்களிம் மும்மதத்தவரின் அடையாளங்களடங்கிய போட்டோக்கள் ஒரே சட்டத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.பலர் இதை ஒரு விடயமாகவோ அல்லது நெருடலாகவோ கருதுவதில்லை என்பது என் கருத்து.

அப்புறம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3ம் நடை மேடையில் உள்ள அன்னை மேரிமாதாவின் முன்னால் அனைத்து மதத்தினரும் ப்ரார்த்தனை செய்து செல்வதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

வன்னியில் கொலை செய்தவர்கள் சிங்களர்கள். தாராளமாகக் கண்டிக்கலாம்.
மூதூரில் முஸ்லீம்களை கொன்றவர்கள் புலிகள். எப்படி கண்டிப்பது?
தமிழர்கள் முஸ்லீம்களை கொலை செய்வதை கண்டிக்கக்கூடாது அல்லது கண்டுகொள்ளக்கூடாது என்பதுதான்.

மூதூரில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் செய்யாததற்கு காரணம் அவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அல்ல. அந்த கொலைகளை செய்தவர்கள் புலிகள் என்பதாலேயே.

கோயம்புத்தூரில் முஸ்லீம்கள் தமிழர்களை கொலை செய்தாலும் கலைஞர் கண்டிக்க மாட்டார். அவர் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார்.

jagannathan சொன்னது…

nalla vesayam romba ullathu....

பெயரில்லா சொன்னது…

//வன்னியில் இந்துக்கள் இறந்தால் கலைஞர் சட்டசபையில் கண்டனம் செய்கிறார்.
மூதூரில் முஸ்லீம்கள் இறந்தால், கண்டுகொள்வதில்லை அல்லவா?///
இந்த அனானிமஸ் முல்லா, விஷமத்தனமாக ஈழவிடுதலைக்கு மதச்சாயம் பூசப் பார்க்கிறார். கலைஞர் கருணாநிதி சட்டசபையில் கண்டனம் தெரிவித்தது தமிழார்கள் வன்னியில் கொல்லப்பட்டதற்காகவே தவிர இந்துக்களுக்காக அல்ல. கலைஞர் முஸ்லீம்கள் சிலர் மூதூரில் இறந்ததற்குக் கண்டனம தெரிவிக்காததற்குக் காரணங்கள்,
1) மூதூர் முஸ்லீம்கள் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதில்லை, அவ்ர்கள் சலுகைகளுக்காகச் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களின் முதுகில் குத்தியது, சிங்கள இராணுவத்துடண் சேர்ந்து கொண்டு தமிழர்களைக் கொலை செய்தது.
2) தமிழினம் மத அடிப்படையிலானதல்ல, முஸ்லீம்கள் மத அடிப்படையிலானவர்கள், இலங்கை முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதில்லை, அதனால் தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி இலங்கை முஸ்லீம்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, அவர்களுக்காகக் கவலைப்பட ஒசாமாவும், ஜிகாதிகளும், பாகிஸ்தானின் முஸ்லீம் தீவிரவாதிகளும், Anti Tamil வீரமணிகளும் உள்ளார்கள், கருணாநிதி அவர்களுக்காகக் கண்டனம் தெரிவிக்கத் தேவையில்லை.
மூதூரில் விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொலைசெய்தார்கள் என்பது சிங்கள அரசினதும், அவர்களின் காலை நக்கும், தமிழெதிரி மலே முஸ்லீம்களின் வழி வந்த சில முஸ்லிம் தலைவர்களினதும் கற்பனை, அவர்கள் அப்படிப் பொய்ப்பிரச்சாரம் செய்தால் தான், அவர்களின் அமைச்சர் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இன்னும் ஈழத்தமிழர்கள் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்களைச் சகோதரர்களாகத் தான் நினைக்கிறோம் ஆனால் நாம், தமிழராக நடித்துக் கொண்டு முதுகில் குத்தும் எம்மிடையிலுள்ள துரோகிகளையே மன்னிக்காத போது, தமிழ் பேசிக் கொண்டே, ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும், தொப்பி பிரட்டி முஸ்லீம்களை மன்னிக்க வேண்டும்.
அப்பனே அனானிமஸ் ஈழத்தமிழர்களின் முதுகில் நீரும் குத்து முன்பு, உண்மையான களநிலவரத்தைப் பாரபட்சமின்றி அறிய முயலும் அல்லது உமது தமிழ்த் துரோகத்தைத் தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.


ஆரூரன்
www.unarvukal.com

செல்வமணி சொன்னது…

இது மிகவும் கண்டிக்கதக்க விசயம்.சில போலீஸ் வாகனங்களில் கூட கடவுள் படங்கள்,சின்ன விக்ரகங்கள் வைக்கப் பட்டு மலர்சூடி ஊதுபத்தி கொளுத்தப்படுகிறது.இந்த வாகனங்கள் எல்லா மதத்தவர்களும் செலுத்திய வரிப்பணத்தில் வாங்கப்பட்டது.இதையெல்லாம் உயரதிகாரிகள் கண்டிக்கவேண்டும்.இதுபற்றி அரசு ஆணையே உள்ளது.இந்து மத அடையாளங்களை மட்டும் சொல்லவில்லை..இது அனைத்து மத அடையாங்களூக்கும் பொருந்தும்.

சிறுது நாட்களுக்கு முன் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பூமி பூஜைகூட இந்துமதபடிதான் நடத்தப்பட்டன.நாம் அனைவரும் அமைதியாகத்தான் பார்த்துக்கொண்டிருங்தோம்.

மதசார்பற்ற நாடு என்று நம் நாட்டை சொல்லிக்கொண்டு' the majority gets the right to do' என்று சொல்லுவது முறையல்லவே.

பெயரில்லா சொன்னது…

இந்துத்துவ கருத்துகளுக்கு விளக்குப் பிடித்து இங்கு எழுதியிருக்கும் இரைனேசன் என்பவ்ரை கண்டிக்கிறேன். மதம் என்பது அவரவர் சொந்த விவகாரம். அதை அரசு மற்றும் பொது சொத்தில் கொண்டு வருவதில் உடன்பாடில்லை

லார்ஜ் புஷ்

பெயரில்லா சொன்னது…

"எந்த அரசு அலுவலகத்திலும் எந்த விதமான மத அடையாளமும் இருக்கக்கூடாது என்பது அரசு விதி.அதை மீறி இப்படியெல்லாம் செய்யும்போது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..?"

இப்படி ஒரு அரசு விதியும் இருப்பதாகத்தெரியவில்லை. இருந்தால் சுட்டிக்காட்டவும். அரசே இந்து கோவில்களை (மட்டும்) எடுத்து நடத்தும் நாட்டில் மத சார்பற்ற நாடு என்பதெல்லாம் வெற்று வாதம்தான். பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அரசு கட்டிடங்களை மதம் நீங்கிய கட்டிடங்களாக அறிவித்து விட்டால் இந்த பிரச்னை எழாதல்லவா- உங்கள் அடுத்த பதிவு பதிவு பொது சிவில் சட்டம் வேண்டும் என வலியுறுத்துவதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். கத்தோலிக்க கிறித்துவ சபை பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது என்பதையும் குறித்துக்கொள்ளவும்.

துளசி கோபால் சொன்னது…

சரி, வந்ததுக்கு நானும் என் மனசுலெ இருக்கற ஒண்ணைச் சொல்லிட்டுப்போறென்.

ஒரு சமயம் பெங்களுருக்கு, சதாப்தி( பேர் சரியா?) எக்ஸ்ப்ரெஸ்லே போக சென்னையில்
ரெயில் ஏறக் காலையில் வந்தால்.............. ரயில்லே 'காயத்ரி ஜெபம்' பாடிக்கிட்டு இருந்துச்சு.
ரயில்லே பல மதத்துக்காரரும் பயணிக்கிறாங்க. அப்படி இருக்க இந்துப் பாட்டு மட்டும் போட்டா
நல்லவா இருக்கு?
இல்லேன்னா ஒவ்வொரு நாளுக்கும் வேற வேற மதப்பாடல்கள் போடறாங்களா?

மருதநாயகம் சொன்னது…

கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை தான் இருக்கிறதா?

பாபு சொன்னது…

'மத சார்பற்றது' என்பதன் பொருளில் முழுமையாக அரசு செயற்பட வேண்டும். தனி மனிதர் என்ற அளவில் அப்துல் கலாம் முஸ்லிமாக இருக்கட்டும். மன்மோகன் சீக்கியராக இருக்கட்டும். அத்வானி இந்துவாக இருக்கட்டும். ஆனால் இந்திய குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இவர்கள் 'மதமின்றி' இருக்கட்டும்.

இன்னுஞ்சொல்வதென்றால், 'கோயிலில் பிரதமருக்கு/தலைவருக்கு சிறப்பு வரவேற்பு' என்கிற செய்திகள் ஒரு மதசார்பற்ற நாட்டில் வராதிருக்கவேண்டும்.

அந்த வகையில் முன்னாள் முதற்குடிமகனாக இருந்த ஜாகீர் ஹுசேன் என்பார் அந்த பதவியில் இருந்த போதும் பள்ளிக்கு தொழுவதற்கு தாமதமாகச் சென்றதால் 'கடைசி வரிசையில்' தான் சாமானியர்களோடு தொழுகை செய்தார் என்ற ஒரு செய்தி ஆறுதலானது.

இதில் இரு கருத்துக்கள்:
1). ஆலயங்களில் 'மனிதப் பதவிகள்' செல்லாமல் போவது.
2). 'அரசாங்கமாக' எந்த மத ஆலயத்துக்கும் செல்லாதது.

பாதுகாப்புப் பிரச்னைகள் என்று எதிர்வாதம் புரியவருவோருக்கு:அப்படியானால் அந்த 'அவர் ' தம் இல்லத்திலேயே 'இறை வழிபாடு' செய்யட்டுமே!

Muse (# 5279076) சொன்னது…

பொதுவான இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான விஷயங்கள் இருப்பது தவறுதான். ஆனால் இது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள விஷயங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி பெரும்பாலான தனியார் குடியிருப்புக்களுக்கு இது பொருந்தாது.

பாபு சொன்னது…

//பொதுவான இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான விஷயங்கள் இருப்பது தவறுதான். //
மியூஸ், அதைத்தான் இந்தப்பதிவு பேசுகிறது. உங்களைப் போன்றவர்களே ஒத்துக்கொண்டதால் அது பதிவின் வெற்றியே. ஆனால் இந்தப்பதிவின் கருத்து இன்னமும் சப்தமாகப் பேசப்படவேண்டும். மதச் சார்பற்ற நாட்டின் 'காதில்' விழுமளவுக்கு.
மற்றபடி, தொடரும் உங்கள் பின்னூட்ட வரிகள் வழமையான வழவழா தான்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

யோசிக்கவேண்டிய கருத்துதான்.. நண்பர்கள் பலரும் சொல்வதுபோல பல மதப் படங்கள் உள்ள அரசு அலுவலங்கள் நிச்சயம் உள்ளன ..ஆனால் இந்துக் கடவுள்களின் படங்கள் 'மட்டுமே' உள்ள அலுவலகங்கள் உள்ளதே தவிர மத்த மதப் படங்கள் 'மட்டுமே' உள்ள அலுவலங்கள் இருப்பதென்பது குறைவுதான் எனப் படுகிறது.

அரசு அலுவலகங்களில் இப்படி படங்கள் வைப்பது தவிர்க்கப்படவேண்டும்.

ஆயுத பூஜை நல்ல விஷயம் அதையும் பொதுவான முறையில் நடத்தலாம் (பூசைகளை தவிர்த்துவிட்டு). பொது வழிபாட்டு முறைகளை யாராவது அறிமுகப் படுத்தினால் நல்லாயிருக்கும்.

லொயோலா கல்லூரியில் வருடாந்திர விழாவில் கீதை, குர் ஆன், பைபிள் மூன்றுமே வாசிக்கப்படும். இதையும் தாண்டி பொதுவான வழிபாட்டுமுறைகளை கொண்டுவருவது அவசியம் எனப்படுகிறது.

ஆழியூரான். சொன்னது…

//இந்தப்பதிவின் கருத்து இன்னமும் சப்தமாகப் பேசப்படவேண்டும்.//

நன்றி ராஜா..

ஆழியூரான். சொன்னது…

//பொது வழிபாட்டு முறைகளை யாராவது அறிமுகப் படுத்தினால் நல்லாயிருக்கும்//

நல்ல யோசனை..வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ்..

ஜோ / Joe சொன்னது…

என்னைப் பொறுத்தவரை இந்து மத அமைப்புகள் வேண்டுமென்றே செய்யாமல் ,தனிப்பட்ட இந்துக்களின் தேவைகளுக்காக இப்படி சில சலுகைகள் ,முன்ன்னுரிமைகள் இருப்பதை சிறுபான்மை மதத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளுவதில்லை .

ஆயுத பூசை போன்ற விழாக்கள் இதற்கு உதாரணம் .ஆட்டோ ஸ்டாண்டில் நிற்கும் ஒரு கிறிஸ்தவரின் ஆட்டோவுக்கும் அன்று பூசை தான்.

சினிமா உலகில் இப்ராகிம் ராவுத்தர் படம் எடுத்தாலும் ,எஸ்.ஜே சூர்யா படமெடுத்தாலும் பூசை போடுவதென்னவோ இந்து முறைப்படி தான்.

//ஆனால் இந்துக் கடவுள்களின் படங்கள் 'மட்டுமே' உள்ள அலுவலகங்கள் உள்ளதே தவிர மத்த மதப் படங்கள் 'மட்டுமே' உள்ள அலுவலங்கள் இருப்பதென்பது குறைவுதான் எனப் படுகிறது.//

உண்மை .ஆனால் இந்துக்கள் மட்டுமே இருக்கும் அலுவலகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பது போல ,மற்றவர்கள் மட்டுமே உள்ள அலுவலகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவே என நினைக்கிறேன் .

அலுவலகங்களை விடுங்கள் .தனியார் அலுவலகங்களிலும் ,வீடுகளிலும் ,வாகனங்களிலும் மும்மத குறியீடுகளும் இணந்திருக்கும் படத்தை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் 99% ஒரு இந்துவாகத் தான் இருக்கும் .ஒரு கிறிஸ்தவனான நான் தனிப்பட்ட இந்துக்களை விரும்புவதற்கு இது ஒரு காரணம்.

Muse (# 5279076) சொன்னது…

மியூஸ், அதைத்தான் இந்தப்பதிவு பேசுகிறது. உங்களைப் போன்றவர்களே ஒத்துக்கொண்டதால் அது பதிவின் வெற்றியே.

ராஜா,

என் போன்றவர்கள்தான் ஒத்துக்கொள்வார்கள். என்ன இருந்தாலும் ஹிந்து அல்லவா நான்.

மற்றபடி, தொடரும் உங்கள் பின்னூட்ட வரிகள் வழமையான வழவழா தான்.

எந்த வரிகள்? எதனால் அவை வழவழா என்று இருக்கின்றன? என்பதையும் கூறினீர்களென்றால் திருத்திக்கொள்வேன்.

ஆழியூரான். சொன்னது…

கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இதுதான் நிலைமையா..? என்று மருதநாயகம் கேட்டிருக்கிறார்.எனக்குத் தெரியவில்லை.தெரிந்த நண்பர்கள் சொல்லலாம்..

ஆழியூரான். சொன்னது…

//அரசே இந்து கோவில்களை (மட்டும்) எடுத்து நடத்தும் நாட்டில் மத சார்பற்ற நாடு என்பதெல்லாம் வெற்று வாதம்தான்//

அனானி சொல்லியிருக்கிற இந்த கருத்தை யோசிக்கவும்,விவாதிக்கவும் வேண்டிய விஷயமாக நினைக்கிறேன்..

கால்கரி சிவா சொன்னது…

அதுசரி அந்த இடங்களில் மாற்று மதத்தினர் வழிபாடுகளுக்கு அல்லது அடையாளங்களுக்கு தடை இருந்தனவா?

தடை இருந்திருந்தால் உங்கள் கேள்வி நியாயமானதே. தடை இல்லாத பட்சத்தில் இந்த கேள்வி தேவையில்லை

கால்கரி சிவா சொன்னது…

//கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இதுதான் நிலைமையா..? //

இந்த மாநிலங்களில் அதிகம் வேலைப் பார்த்தவன் என்பதால் என்னுடைய பதில் ஆம். அங்கும் அவரவர்கள் தங்கள் வழிபாடுகளை செய்கிறார்கள்.

கம்யூனிசம் பேசுவதற்கும் தேர்தலுக்கு மட்டும் தான் உபயோகம்

athaps சொன்னது…

ஆயுத பூஜை அன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பூஜை புனஸ்காரம் செய்யப்பட்டு சுண்டலும் வழங்கப்படும். இந்த பூஜைகள் காவல் நிலையத்தின் உள்ளேயே நடக்கும்.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//உண்மை .ஆனால் இந்துக்கள் மட்டுமே இருக்கும் அலுவலகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பது போல ,மற்றவர்கள் மட்டுமே உள்ள அலுவலகங்கள் இருப்பதற்கு வாய்ப்பு குறைவே என நினைக்கிறேன் .

அலுவலகங்களை விடுங்கள் .தனியார் அலுவலகங்களிலும் ,வீடுகளிலும் ,வாகனங்களிலும் மும்மத குறியீடுகளும் இணந்திருக்கும் படத்தை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் 99% ஒரு இந்துவாகத் தான் இருக்கும் .ஒரு கிறிஸ்தவனான நான் தனிப்பட்ட இந்துக்களை விரும்புவதற்கு இது ஒரு காரணம்.//

மிகச் சரியான வாதம்.. யோசிக்கத் தவறிவிட்டேன்..

என்னைக் கேட்டால் படம் வைப்பதை பொது இடங்களில் தவிர்க்கவேண்டுமென்றே சொல்லுவேன். அப்படி தெய்வப் படங்கள் வைத்தால் வேலை ஒழுங்கா நடக்குமென்றாலும்கூட அதை அனுமதிக்கலாம்.. லஞ்சக் காசில்தானே கடவுளுக்கே காணிக்கை.

பெயரில்லா சொன்னது…

And whenever Govt is going to start new train or bus service, they will do pooja.

Why? Are other people going by without paying money?

Mansoor

சுந்தரவடிவேல் சொன்னது…

இப்பதிவின் கேள்வி அவசியமானது.

ஆழியூரான். சொன்னது…

நன்றி சுந்தரவடிவேல்...இந்த பதிவின் நோக்கமும் அதுதான்.எல்லோருடைய உணர்வுகளும் மதிக்கப்படவேண்டிய இடத்தில் தன் சுய மதிப்பீட்டை மட்டும் தூக்கிப்பிடிக்க வேண்டாமே என்பதுதான் என் எண்ணம்.

பெயரில்லா சொன்னது…

திருப்பதி, திருச்செந்தூர், பழனி கோவிலிருந்து கோடி கோடியாய் இந்திய அரசு கொள்ளையடிக்கிறதே அதை எங்க போய் சொல்வீங்க?

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

உண்மைதான் நடைவண்டி ஸார்.. அதென்னமோ தெரியல.. பக்தி விஷயத்தில் மட்டும் மற்ற மதத்தினரைவிட இந்துக்கள் உடனடியாக செயலாற்றி விடுகிறார்கள். எங்கு சென்றாலும் மெஜாரிட்டி அவர்களாக இருக்கிறார்கள் என்பதாலோ என்னவோ.. தயக்கமே கொள்வதில்லை..

ஆனால் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் அப்படியல்ல.. அவர்களது இல்லம் தவிர மற்ற இடங்களில் தங்களுடைய மதக் குறியீட்டை வெளிப்படுத்துவதற்கு இன்னமும் தயக்கத்துடன்தான் இருக்கிறார்கள். இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்..