லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?

வலைப்பூக்களில் அண்மை நாட்களாகவே லிவிங்ஸ்மைல் வித்யாவை குறிவைத்து மறைமுகமான தாக்குதல்கள் நடைபெற்றுவந்தன.அது இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது.`லிவிங் ஸ்மைலின் இரட்டை வேடம்` என்ற தலைப்பில்,செந்தழல் ரவி வெளியிட்டிருக்கும் பதிவில் அவரது முகம் மட்டுமே தென்படவில்லை.அவரை ஒத்த பலரின் `நாட்டுப்பற்று` முகமும் அதில் தெரிகிறது.

"இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்.சக மனிதனை மனிதன் என்று கூட ஒத்துக்கொள்ளாத சாதி சகதியைப் பற்றி அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் திருநங்கைகளுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.ஒடுக்கப்பட்ட தளத்தில், தலித்துகள் வாழ்வியல் காரணங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது,அதனோடு சேர்த்து தங்களின் பாலியல் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள்.

பேருந்தில் ஏறினால் நிலைகுத்திய பார்வையோடு உற்றுபார்ப்பது முதல், சாலையில் செல்லும்போது வெறித்து வெறித்துப் பார்த்து சங்கடப்படுத்துவது வரை திணசரி வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம்.மிகவும் பாதுகாப்பாகவே வளர்ந்து விட்ட நீங்களும்,நானும் அவர்களின் துயரங்களை முழு வீச்சில் உணர முடியாது.'தலை வலியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்'என்பார்கள்.நம் வீட்டிலும் இப்படியொரு திருநங்கை உருவாக வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

எல்லா வகையிலும் ஒடுக்கப்படும் திருநங்கைகளுக்கு நாட்டின் மற்ற குடிமகன்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை.ஒரு நாடு தனது குடிமகன்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை மறுப்பதும்,இந்த சமூகம் அவர்களை மனிதர்களாகவே மதிக்காததும் எந்த வகையான பற்று..?ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது பௌதீக விதி.நிராகரிப்பு என்னும் வினைக்கு எதிர்வினையும் நிராகரிப்பாகத்தானே இருக்க முடியும்-சங்கராச்சாரியார் கைதுக்கு முன்பு மக்களை மடம் நிராகரித்ததும்,கைதுக்கு பிறகு மடத்தை மக்கள் நிராகரித்ததையும் போல.

உலகில் ஒடுக்கப்பட்ட சக்திகள் மீட்சிக்கு முயலும்போதெல்லாம், இதுபோன்று ஆரம்பகட்ட முட்டுக்கட்டைகள் போட ஏராளமானோர் இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.தலித்துகள் கோயிலுக்கு நுழைய முற்பட்டபோது,'நீ கோயிலுக்கு நுழைந்தால் கடவுளுக்குத் தீட்டு' என்று கடவுள் பெயராலேயே தடைபோட்டார்கள்.திருநங்கையொருவர் நாட்டின் யதார்த்த நிலைமையை விளக்கும் விதமாக,`நாட்டுப்பற்று இல்லை` என்று சொன்னால், அவர்களை இந்த நாட்டுக்கே விரோதிகளாக சித்தரிக்கிறார்கள்.இரண்டும் வேறு வேறானது அல்ல.

நாட்டின் சகல வளங்களையும் கூறு கட்டி விற்கிறது அரசு.பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டின் தண்ணீரையே உறிஞ்சி நமக்கே விற்கின்றன.கிடைக்கும் அனைத்தையும் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மொத்தமாகவும்,சில்லைரையாகவும் பங்கிட்டுக் கொள்கின்றனர்.ஆகப்பெரும்பான்மை ஏழை மக்களின் நலன் மறந்து, பத்து சதவிகித மேட்டுகுடி மக்களின் மென்பொருள் சாதனைகளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மீடியாவும்,அரசாங்கமும்.உங்களின் நாட்டுப்பற்று கூட இந்த அனைவராலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான்.

லிவிங் ஸ்மைலின் வார்த்தைகளை, அதன் உண்மையான அர்த்த வடிவில் புரிந்து கொள்ளாததுபோல பாவனை காட்டும் எல்லோருமே, அடக்குமுறை அதிகார வர்க்கத்தின் பிம்பங்களேயன்றி வேறில்லை.

கருத்துகள்

புதுமை விரும்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//நிராகரிப்பு என்னும் வினைக்கு எதிர்வினையும் நிராகரிப்பாகத்தானே இருக்க முடியும்//

மிகவும் சரியான வார்த்தைகள்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி புதுமை விரும்பி..
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
// "லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?" //

தப்பாவது?!.. இப்படி ஏதாச்சும் எழுதினாத் தானே பதிவுகள் படிக்கிற மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு தெரியும்..

அவர் பதிவெல்லாம் எடுத்துப் பாருங்க.. அப்புறம் இப்படிப் பதிவு போட மாட்டீங்க.. ஒரு பயனும் இருக்காதுன்னு புரிஞ்சிரும்..
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
மிகச்சரியாக எழுதப்பட்ட கட்டுரை.

//"இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்//
நன்றி அம்பேத்காரை மேற்கொள் காட்டி இந்த விதயத்தை சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு உதவியதற்கு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாலு முட்டா பயலுங்க பேசுறாங்கன்னு டென்சன் ஆவாதீங்க பாசு..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பொன்ஸ் என்ன சொல்ல வர்றீங்க..எனக்கு பிடித்த ஆறு வகை சட்னி;ஆறு வகை ஊறுகாய்..என்றெல்லாம் பதிவு போட்டால்தான் பயனுள்ள பதிவென்று ஒத்துக் கொள்வீர்களா..?

லிவிங் ஸ்மைலின் அனுபவங்கள், திருநங்கைகளை அவலத்துக்குள்ளாக்கும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் உங்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்க வில்லையா..?
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
'சாதிதான் சமூகம் என்றால்,வீசும் காற்றில் விஷம் பரவட்டும்..'என்று சொன்ன அம்பேத்கர் சரியான உதாரணம் என்று சொன்ன தங்கமணியாருக்கு நன்றி...
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
hello anonymous..அந்த நாளு முட்டா பயலுக யாருன்னு சொன்னா வசதியாயிருக்கும்.(மொத ஆளு நீதாண்டா வெளக்கெண்ணைன்னு மட்டும் சொல்லிடாதீங்க..)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான் அங்கே நடந்தது இந்த புரிந்துகொள்ளா தன்மைதான் பொன்ஸ் சொன்னது வித்யாவை அல்ல அது செந்தமிழ் ரவிக்கு . அதுக்குள்ள எல்லாரையும் புடிச்சி கொளுத்த வேண்டியது அப்புறம் இதச் சொல்ல சுதந்திரம் இல்லையாங்க வேண்டியது போய் செந்தமிழ் ரவியோட பதிவில் அவங்க(பொன்ஸ்) பின்னூட்டத்தை பாருங்க அப்புரமா கொளுத்துங்க இதே தான் லக்கி ஒன்னு சொல்ல அதுக்கு வித்யா ரொம்ப காட்டமா பதில் கொடுக்க இடையில அனானி புகுந்து கலாய்க்க ஒரே நாராசமா ஆச்சி அதனால கொஞ்சம் நிதானமா எழுதுங்க இதை சொல்ல நான் யாருன்னு பாக்கறீங்களா கருத்தில் என்ன வேனும்னாலும் உங்க கோவத்த காட்டுங்க ஆனா அதை அந்த அந்த பதிவர் மேல காட்டாதிங்கன்னு சொல்ற ஆளு
நாமக்கல் சிபி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
நீங்க பொன்ஸ் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...

அவுங்க யாரைப் பத்தி பேசறாங்கனு உங்களுக்கு புரியவில்லையா???
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு. உங்களின் பிற பதிவுகளையும் பின்னோக்கிச் சென்று படித்தேன். அருமையான நடை கொண்டு சிறப்பான பதிவுகளையும் வித்தியாசமான சிந்தனைகளையும் நீங்கள் முன்வைக்கும் அழகு என்னைக் கவர்கிறது. இது போன்ற ஆரோக்கியமான பதிவுகளைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
செல்வநாயகி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான். நிதானத்துடனும், உண்மைகளை அழுத்தமாகக் கோடிட்டும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

பொன்ஸ்,
"எதுவும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத இடத்தில் பேசிப்பயனென்ன?" என்ற அயற்சியில் விளைந்த உங்கள் பின்னூட்டத்தை அதற்குள்ளான வலியுடன் உணரமுடிகிறது. ஆனாலும்கூட ஆழியூரானின் இப்பதிவுமாதிரியும் இங்கு எழுதப்படத்தான் வேண்டும் பேரிரைச்சலுக்கிடையிலும் ஒரு நல்ல சங்கீதம் போல. இசை விரும்புபவர்களுக்கு இசை, பொருளற்ற கூச்சலே சுகம் என்பவர்களுக்குக் கூச்சல்.
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
/////இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்...

an INDIAN///

அட அருமையான பின்னூட்டம் என்று நினைப்பவர்களுக்கு...

லிவிங் ஸ்மைல் அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் பாருங்கள்.. தேசியக்கொடியேத்திய திருநங்கை

//நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்..///


மேலே குறிப்பிட்டிருக்கும் இரு பின்னுட்டங்களை மட்டுமே ஒப்பிட்டு செந்தழல் ரவி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.

இதில் முரண் இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, பொத்தாம்பொதுவாகப் பேசுவது தவறு என எண்ணுகிறேன்.

அவரது அவலங்களுக்குக் கை கொடுத்து நான் கூட ஒரு தனிப்பதிவு போட்டிருக்கிறேன்.

அதுவல்ல இங்கு கருப்பொருள்.

இதில் எது தனது உண்மை நிலைப்பாடு என்பதை அவர்[லிவிங்ஸ்மைல்] தான் சொல்ல வேண்டுமே அல்லாது, நாம் ஒரு நிலைப்பாடு கொள்ள வருவது, திசை திருப்பலாகவே ஆகும் என அஞ்சுகிறேன்.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
//
"இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்.சக மனிதனை மனிதன் என்று கூட ஒத்துக்கொள்ளாத சாதி சகதியைப் பற்றி அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள் திருநங்கைகளுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும்.ஒடுக்கப்பட்ட தளத்தில், தலித்துகள் வாழ்வியல் காரணங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது,அதனோடு சேர்த்து தங்களின் பாலியல் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள்.//

well said.

A post that talks about the reality and which has understood the point Living Smile Vidya was trying to make. The problem lies with us. We did not even make an attempt to understand what she was talking about.

Quoting Ambedhkar and drawing parallels would help people understand (I hope)

Thankyou for your timely post.
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான். பொன்ஸ் 'அவர் பதிவெல்லாம்' என்று சொன்னது லிவிங் ஸ்மைலின் பதிவுகளை இல்லை. நீங்கள் பொன்ஸ் சொன்னதை இன்னொரு முறை படித்துப்பாருங்கள். பொன்ஸ் சொல்லும் அவர் யாரென்று புரியும்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னிரவில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முதலில் பொன்ஸ்-கு ஒரு பெரிய சாரி..நான் இடைவிடாமல் வலைப்பூ வாசிக்கிறவன் இல்லை.அவ்வப்போது வந்து போகிறவன்.அதனால் நேர்ந்த தவறு இது.மற்றபடி அவர் மீது எனக்கென்ன கோபம்..?அந்த என் பின்னூட்டத்தை பார்த்துவிட்டு நல்லதுக்கே காலமில்லை..' என்று நினைத்திருப்பார் பொன்ஸ்.அவரது கருத்துகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாத அளவுக்கு புத்தி குறைபாடோடு இருப்பதற்கு வருந்துகிறேன்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சாரா..இந்த பக்கம் இதுதானே முதல் வருகை..வாங்க..வாங்க..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
எனது மற்ற பதிவுகளையும் மெனக்கெட்டு வாசித்து கருத்து சொன்ன செல்வராஜ் அண்ணாச்சிக்கு நன்றிங்கோ..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//பொன்ஸ்,
"எதுவும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத இடத்தில் பேசிப்பயனென்ன?" என்ற அயற்சியில் விளைந்த உங்கள் பின்னூட்டத்தை அதற்குள்ளான வலியுடன் உணரமுடிகிறது.//

செல்வநாயகி உணர்ந்து கொண்டதை ஆழியூரான் உணராததன் விளைவு,ஒத்த கருத்துடைய பொன்ஸை காயப்படுத்தி விட்டேன்.

பொன்ஸ்,நான் இருவரும் எந்த மாதிரியான மன உணர்ச்சிகளுடன் தத்தமது பதிவுகளை எழுதியிருக்க முடியும்..என்று தெளிவாக சொன்ன செல்வநாயகிக்கு நன்றி..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்டமிட்ட மதி கந்தசாமி,எஸ்.கே.,வெட்டிப்பயல்,குமரன் அனைவருக்கும் நன்றிகள்..

தீங்கு செய்வது மட்டுமல்ல..நல்ல விஷயங்களை ஆதரிக்காததும் சமூக குற்றம்தான்.இந்த எண்ணத்தில்தான் அந்த என் பதிவை போட்டேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆட்டத்தில் நீங்களுமா? வாங்க.. வாங்க...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//"இந்த நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லையென்றால் அதற்கு நான் காரணமல்ல.நான் வாழ்வதற்குரிய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட தர மறுக்கும் இந்த நாடுதான் காரணம்.." என்றார் அம்பேத்கர்//

இது தலித்துகளுக்காக சொல்லப்பட்டது தானே... அலிகளுக்கு எப்படி பொருந்தும்னு அவர்கள் கேட்கலாம்...
அதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க...?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
// புதுமை விரும்பி said...
//நிராகரிப்பு என்னும் வினைக்கு எதிர்வினையும் நிராகரிப்பாகத்தானே இருக்க முடியும்//

மிகவும் சரியான வார்த்தைகள்.

//

அய்யா.. இதுக்குப் பெயர் தான் உள் குத்து...
- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
:)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
GoodJoB!!!!!!
-raj.
ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
:))
ரவி இவ்வாறு கூறியுள்ளார்…
///தப்பாவது?!.. இப்படி ஏதாச்சும் எழுதினாத் தானே பதிவுகள் படிக்கிற மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு தெரியும்.. //

::)

///அவர் பதிவெல்லாம் எடுத்துப் பாருங்க.. அப்புறம் இப்படிப் பதிவு போட மாட்டீங்க.. ஒரு பயனும் இருக்காதுன்னு புரிஞ்சிரும்..///

::)))))))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பொன்ஸ் மட்டும் உலக இலக்கியத்தரத்துக்கு எழுதி தள்ளுகிறாரா? அவர் எழுதுவதும் குப்பை தான். அந்தக் குப்பைகளுக்கு அவரும் அவரது ஜால்ராக்களுமே பின்னூட்டம் போட்டுக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் ஆஹா ஓஹோவென பாராட்டிக் கொள்ளும் அசிங்கம் தானே தமிழ்மணத்தில் தொடர்ந்து நடக்கிறது?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
///தப்பாவது?!.. இப்படி ஏதாச்சும் எழுதினாத் தானே பதிவுகள் படிக்கிற மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு தெரியும்.. //

pons, இது நக்கல் தானே?உங்க பதிவு ஊரு உலகெல்லாம் தெரியுமா ? நன்பர் செந்தழல் ரவியின் பதிவை படித்து நீங்கள் கருத்து சொல்லி இருந்தால் பரவாயில்ல.ஆனால் அவர்மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்திருக்கீங்களே?

///அவர் பதிவெல்லாம் எடுத்துப் பாருங்க.. அப்புறம் இப்படிப் பதிவு போட மாட்டீங்க.. ஒரு பயனும் இருக்காதுன்னு புரிஞ்சிரும்..///

ஆக அவர் ஒன்னுமில்லாத வெத்துவேட்டு, அதனால அவனுக்கு எல்லாம் ஒரு பதில் பதிவா என்று கேட்கிறீங்க அவ்வளவுதானே?உங்க சந்திரா அத்தை அலி, போன்ற கதைகள் சர்வதேச நாளிதழில் வெளியிடும் அளவு உயர்ந்ததோ?
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
மகேந்திரன்.பெ said...

//ஆழியூரான் அங்கே நடந்தது இந்த புரிந்துகொள்ளா தன்மைதான் பொன்ஸ் சொன்னது வித்யாவை அல்ல//


மகி! நீ பெரிய கலகக்காரன்னு நினைச்சேன்(சும்மா டமாசு)
நீயே வந்து மத்தியஸ்தமெல்லாம் பண்ணுர...?என்னமோ போ...
இதுல உகு,வெகு
ஒன்னுமில்லையே?


அன்புடன்...
சரவணன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
லிவிங் ஸ்மைலுக்கு வக்காலத்து வாங்கும் இத்தனை பேரில் ஒருவராவது மனமுவந்து அவரை திருமணம் செய்துக் கொள்ளத் தயாரா? இதைச் சவாலாகவே கேட்கிறேன்.

வெளிவேஷம் போடாதீங்க சார். மனசு என்ன சொல்லுதோ அதை அப்படியே எழுதுங்க.
senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) இவ்வாறு கூறியுள்ளார்…
அதாவதுங்க ஏற்கனவே இந்தப் பிரச்சனையில் தலையிட்டுட்டேன் ஆகையால இந்த பதிவின் பின்னூட்டத்தில செந்தழல் ரவி செய்த தவறையே இன்னொரு பதிவாளரும் செய்கிறார். அதைப் பத்தி சொல்லாம இருக்க முடியல. மத்தவங்கள பத்தி விமர்சிக்கும் பொழுது கொஞ்சம் யோசிச்சு விமர்ச்சிக்கலாம் அவங்க பெரிய எழுத்தாளராவே இருக்கட்டும் நாங்கெல்லாம் எதோ பொழுதுபோக்குக்காக எழுதறவங்க எங்க எழுத்துக்களை இப்படி கேவலமா குறிப்பிட்டிருக்க வேண்டாம்.
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,

உங்க பதிவை நேற்று இரவு படித்தேன்.. நல்ல பதிவு என்று தோன்றிய அதே நேரத்தில், புரிதல் இல்லாதவர்களுக்கு இப்படி ஒரு பதிவு தேவையா என்னும் எண்ணமும் தோன்றிவிட்டது. அதனால் தான் அப்படி எழுதி விட்டேன்..

நான் இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம்.. இருக்க வேண்டும்.. மன்னிப்பு கேட்கவேண்டியது நான் தான்.. வலைப் பதிவுகளில் ஒத்த கருத்துகளே புரியாமல் போவதும் நடக்கிறது தானே :)
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
வேஷம் போடத் தெரியாத ஒருத்தர் தனது கருத்தை சொல்லியுள்ளார்.'அப்படின்னா லிவிங்ஸ்மைல் வித்யாவை கல்யாணம் செஞ்சுக்குவியா..?'என்று கேட்டிருக்கிறார்.அநேகமாக மனதிற்குள் 'மடக்கிட்டோம்ல..'என்று நினைத்திருப்பார்.

ஆதி காலத்திலிருந்து தொடரும் புளித்துப்போன எதிர்கருத்து இது.தலித்துகளுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு உயர்சாதியைச் சேர்ந்தவர் பேசும்போது,உடனே 'அப்படின்னா ஒரு எஸ்.ஸி. வீட்டு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்குவியா..?'என்று கேட்பதுதான், இப்போது வேறொரு வடிவில் வேறொரு தளத்தில் வெளிப்படுகிறது.

எந்த திருநங்கையும் 'யாராவது எங்களை திருமணம் செய்துகொள்ளுங்களேன்' என்று அலையவில்லை.அவர்கள் கேட்பது உங்களையும் என்னையும் போன்ற மிகச் சாதாரண வாழ்க்கையை.கேட்கும் உரிமையை தர மறுக்கும் நாம்தான் அவர்கள் கேட்காத விஷயத்தை சுட்டிக்காட்டி திருநங்கைகளின் வாழ்வை மேலும்,மேலும் ரணப்படுத்துகிறோம்.உங்களுக்கு திருநங்கைகளை திருமணம் செய்துகொண்ட உதாரணம்தான் வேண்டுமாயின் தோழி பிரியா பாபு இருக்கிறாரே..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கீரன்..
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
செந்தில் குமரன்,
நான் சொல்ல வந்தது விளம்பரம் தேடும் மனப்பாங்கை மட்டும் தான்.. ரவியின் மற்ற பதிவுகளைப் பற்றியது இல்லை.. "அவர் பதிவெல்லாம்" என்று குறிப்பிட்டது தான் இங்கே விமர்சிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.. "அவர் பிற பதிவர்களை விளித்துப் போட்ட பதிவுகள்" என்று படிக்கவும்.. (அந்தப் பதிவுகளை மட்டும் தான் நானும் படித்திருக்கிறேன்)

நான் நல்லா எழுதுறேனா என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை.. உண்மையைச் சொல்வதானால், நானும் பொழுது போக்குக்காக எழுதுபவள் தான்.. பெரிய எழுத்தாளர் என்று என்றைக்குமே சொன்னதில்லை..

சங்கம் ஆரம்பித்ததே பின்னூட்டம் வாங்கத்தான் என்று சிலர் சொன்ன போதும், சங்கத்தின் மூலம் தான் பரிசு பெற்றோம் என்ற போதும் வருத்தப்பட்ட ஆள் நான்.. உங்களையோ, ரவியையோ எழுத்து நடைக்காகவோ, தரத்துக்காகவோ நான் விமர்சித்த நினைவில்லை..

இப்போ எழுதியதில் கூட கேவலமாக என்ன இருக்கிறது சொன்னால், திருத்திக் கொள்ள நான் தயார்..

இளமாறன்,
சாரிங்க.. உங்களுக்குச் சொல்ல எனக்குக் கருத்தில்லை.. மன்னிக்கவும்..
தருமி இவ்வாறு கூறியுள்ளார்…
"தீங்கு செய்வது மட்டுமல்ல..நல்ல விஷயங்களை ஆதரிக்காததும் சமூக குற்றம்தான்.இந்த எண்ணத்தில்தான்" இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

சிலரது அதுவும் ஏதோ ஒரு பெயரைப் போட்டுக்கொண்டோ அல்லது அதுவும் இல்லாமலோ சிலர் எழுதும் எழுத்துக்கள் சீழ்பிடித்த அவர்களின் மன வக்கிரங்களைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஆழியூரான் போன்றவர்களாவது அத்தகைய பின்னூட்டங்களை நிராகரிக்க வேண்டுமென நினைக்கிறேன். எதற்கு அந்தக் குப்பைகளின் மேல் வெளிச்சம்..? அவர்கள் அலைவதே இது போன்ற வெளிச்சங்களுக்குத்தானே.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன நடக்குது இங்கன...
நீயாவது உருப்பட வேணாமா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அத சொல்ல நீ யாருடா...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியமா உருப்பட மாட்ட போயா...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தருமி என்னங்க சொல்ல வர்றாரு? யார சொல்லுராரு?

நாதாரி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒண்ணும் உருப்படற மாதிரி தெரியல..
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த விவாதம் தனி நபர் தாக்குதலாக உரு மாறுவதால் லிவிங்ஸ்மைல் பற்றிய என் பதிவுக்கான பின்னூட்டங்கள் இத்தோடு முடித்துவைக்கப் படுக்கிறது. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்