வணக்கம்


`நடை வண்டி` என்ற தலைப்பைப் பார்த்திருப்பீர்கள்.அதன் கீழேயே`மரபு உடைக்க பழகு` என்ற எழுத்துகளும் இருக்கும்.இரண்டையும் பார்த்து விட்டு,`வந்துட்டாய்ங்கய்யா கோடரி தூக்கிக் கிட்டு.. மரபு உடைக்க`என்றோ,`மரபு உடைக்க பழகச் சொல்லிவிட்டு தமிழ் மரபின் அடையாளமான நடை வண்டியைத் தலைப்பாக்கியிருப்பது ஏன்..?`என்றோ நினைக்கலாம்.
நிற்க.வெயில் காலத்தில்`எவ்வளவு மழையா இருந்தாலும் சமாளிச்சுடலாம்..வெயில்தான் பெரியக் கொடுமை..`என்றும்,அடைமழை நேரத்தில் இதற்கு எதிர்மாறாகவும் பேசும்,முரண் சிந்தனை நமது சமூகத்தின் அடிநாதமானது.அதில் நானும் ஒருவன்.அப்படியான முரண் சிந்தனைகளை கூடி விவாதிக்கவும்,புதிய தளத்தில் நடந்து பழகவும்தான் இந்த நடைவண்டி.
வண்டியோட்டியான நான்,தஞ்சாவூர்காரன்.வண்டல் மண்ணின் வாசனையோடு பெருநகரத்தில் வாழ்பவன் அல்லது பிழைப்பவன்.அப்புறமென்ன..? முடிந்தவரை அடிக்கடி பதிவு போட முயற்சிக்கிறேன்.

கருத்துகள்

Sivabalan இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிரேன்!!
Suka இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஆழியூரான். உங்க தலைப்பின் வரிகள் 'மரபு உடைக்கப் பழகு' வெகு அழகு, அவசியமானதும் கூட.

வாழ்த்துக்கள்.
சுகா
மிதக்கும்வெளி இவ்வாறு கூறியுள்ளார்…
வரவேற்கிறேன்.
மிதக்கும்வெளி இவ்வாறு கூறியுள்ளார்…
வரவேற்கிறேன்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சிவபாலன்
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
சுகா..அந்த தலைப்பில் ஒரு சௌகர்யம் உண்டு. ஏதேனும் தவறு செய்தால், `நாங்க மரபு உடைக்க பழகுறோம்` என்று தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்